புரட்டாசி கடைசி சனிக்கிழமை: ஈரோடு பெருமாள் கோயில்களில் குவிந்த பக்தர்கள்

புரட்டாசி கடைசி சனிக்கிழமை: ஈரோடு பெருமாள் கோயில்களில் குவிந்த பக்தர்கள்
X

ஈரோடு பெருமாள் கோவிலில் சாமி தரிசனம் செய்ய நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள்.

ஈரோடு மாவட்டம் முழுவதும் உள்ள பெருமாள் கோயில்களில் இன்று சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் குவிந்தனர்.

தமிழகத்தில் வாரத்தின் இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் கோயில்களில் வழிபாடு நடத்தவும், பக்தர்கள் கூடவும் தடை விதிக்கப்பட்டிருந்ததால், பக்தர்கள் கடந்த 4 வாரங்களாக சனிக்கிழமைகளில் வழிபட முடியாமல், வீட்டிலேயே வழிபாடு நடத்தி வந்தனர்.

இந்நிலையில், தமிழக அரசு வாரத்தின் அனைத்து நாட்களிலும் கோவில்களுக்கு சென்று வழிபாடு நடத்தலாம் என உத்தரவிட்டது. இதன்பேரில், புரட்டாசி கடைசி சனிக்கிழமையான இன்று ஈரோடு மாவட்டம் முழுவதும் பெருமாள் கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அதிகாலை முதலே அலைமோதியது. இதில், ஈரோடு - பவானி ரோட்டில் உள்ள பெருமாள்மலையில் அதிகாலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மூலவரை வழிபட்டு சென்றனர். மேலும், கூடுதுறை ஆதிகேசவபெருமாள் கோயில், ஈரோடு கோட்டை கஸ்தூரி அரங்கநாதர், கவுந்தப்பாடி வரதராஜபெருமாள் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் உள்ள பல்வேறு பெருமாள் கோயில்களில் பக்தர்கள் வழிபட்டு சென்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!