ஈரோடு மாவட்டத்தில் பெட்ரோல் விலை ரூ.101

ஈரோடு மாவட்டத்தில் பெட்ரோல் விலை ரூ.101
X

பைல் படம்.

ஈரோடு மாவட்டத்தில் பெட்ரோல் விலை ரூ.101ஐ கடந்தால் வாகன ஓட்டிகள் கடும் அதிர்ச்சிக்கு ஆளாகினர்.

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 102-ஐ தாண்டியது. தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வந்ததால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். இந்நிலையில் தமிழக அரசு பெட்ரோல் விலையை லிட்டருக்கு 3 ரூபாய் குறைத்துள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் பெட்ரோல் விலை குறைந்தது. இதனையடுத்து ஈரோட்டில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.100 கீழ் குறைந்தது. கடந்த சில நாட்களாகவே பெட்ரோல் டீசல் விலை குறைந்து விற்கப்பட்டு வந்த நிலையில் கடந்த 10 நாட்களாக பெட்ரோல், டீசல் விலை திடீரென உயரத் தொடங்கியது.

ஈரோட்டில் கடந்த 1ம் தேதி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100 - ஐ தொட்டது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில் பெட்ரோல் விலை மேலும் அதிகரித்து. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.101 -ஐ தாண்டியது. ஈரோட்டில் ரூ101.13 க்கு விற்றது. இந்நிலையில் இன்று மேலும் 20 பைசா அதிகரித்து ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 101.39-க்கு விற்பனை ஆனது. இதுபோல் டீசல் விலையும் கடந்த 8 நாட்களாக அதிகரித்து வருகிறது. நேற்று ஒரு லிட்டர் டீசல் ரூ.96.67-க்கு விற்றது. இந்நிலையில் இன்று மேலும் 33 காசுகள் உயர்ந்து ரூ.97-க்கு விற்பனையானது. கடந்த சில நாட்களாக மீண்டும் பெட்ரோல் டீசல் விலை அதிகரித்து வருவதால் வாகன ஓட்டிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Tags

Next Story
ai healthcare products