காதல் மனைவிக்கு பாதுகாப்பு கேட்டு மனு: பெண்ணை மீட்டு போலீசார் அதிரடி

காதல் மனைவிக்கு பாதுகாப்பு கேட்டு மனு: பெண்ணை மீட்டு போலீசார் அதிரடி
X

தனது காதல் மனைவி இளமதியுடன் செலவன்.

காவல்துறையினர் அதிரடி: காதல் மனைவிக்கு பாதுகாப்பு கேட்டு அளித்த மனுவில் போலீசார் அப்பெண்ணை மீட்டு நடவடிக்கை எடுத்துள்ளனர்.

காவல்துறையினர் அதிரடி: காதல் மனைவிக்கு பாதுகாப்பு கேட்டு அளித்த மனுவில் போலீசார் அப்பெண்ணை மீட்டு நடவடிக்கை எடுத்துள்ளனர் ஈரோட்டில் கணவன் கண் முன்னே காதல் மனைவியை இழுத்துச் சென்ற அவரது பெற்றோர் குறித்தும், உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கும் மனைவியை மீட்டுத் தரக்கோரியும் காதல் கணவர் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார்.

ஈரோடு கவுந்தப்பாடி சலங்கை நாயக்கன்பாளையத்தைச் சேர்ந்தவர், செல்வன். இவர், தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவரும் பவானி குருப்பநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த ஜெகநாதன் என்பவரது மகள் இளமதியும் ஒரே நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர். இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்ட நிலையில், நாளடைவில் அது காதலாக மாறியது. இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், அவர்களது குடும்பத்தினர் இவர்களது காதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். இதனை மீறி இருவரும் திராவிடர் விடுதலைக் கழக மாநில செயற்குழு உறுப்பினர் ஈஸ்வரன் முன்னிலையில் கடந்த 2020ஆம் ஆண்டு பெரியார் படிப்பகத்தில் சுயமரியாதை திருமணம் செய்து கொண்டனர்.

காதல் மனைவியை மீட்டுத் தரக்கோரி புகார்: பின்னர், இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர். இவர்கள் இருக்கும் இடத்தை அறிந்த இளமதியின் பெற்றோர் அடியாள்களுடன் வந்து செல்வனைத் தாக்கிவிட்டு, இளமதியை இழுத்துச் சென்றுள்ளார். இதனையடுத்து, செல்வன் இதுகுறித்து காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளார். ஆனால், முறையான விசாரணை நடைபெறவில்லை. மேலும், அதிமுக அமைச்சரின் தலையீட்டால் வழக்கு ஏதும் பதியவில்லை.

இந்நிலையில், இளமதி தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், ஆணவக்கொலை செய்யக்கூடிய நிலையில் தான் இருப்பதாகவும் வாட்ஸ்அப் மூலம் செல்வனுக்குத் தகவல் தெரிவித்துள்ளார். உடனடியாக செல்வன் இது குறித்து காவல் கண்காணிப்பாளரிடம் எடுத்துரைத்தார். மேலும், தனது மனைவியின் உயிருக்கு எவ்வித ஆபத்தும் இன்றி அவரை மீட்டுத் தர வேண்டும்'' எனக் கோரிக்கை வைத்துள்ளார். அவரது கோரிக்கையை ஏற்றுக்கொண்ட ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசிமோகன் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை அடுத்து இன்று அதிரடியாக இளமதியை மீட்டு அவரது கணவனிடம் ஒப்படைத்துள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!