ஈரோட்டில் பி.எம். கேர் திட்டத்தில் பிராணவாயு உற்பத்தி மையம் திறப்பு

ஈரோட்டில் பி.எம். கேர் திட்டத்தில் பிராணவாயு உற்பத்தி மையம் திறப்பு
X
ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் பி.எம் கேர் திட்டத்தின் கீழ், நிமிடத்திற்கு 500 லிட்டர் பிராணவாயு உற்பத்தி செய்யும் மையம் திறக்கப்பட்டது.

ஈரோடு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறையின் சார்பில், பாரத பிரதமரின் பி.எம்.கேர் திட்டத்தின் கீழ், நிமிடத்திற்கு 500 லிட்டர் கொள்ளளவு ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் பிராணவாயு உற்பத்தி மையம் துவக்கி வைக்கப்பட்டது.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இ.திருமகன் ஈவெரா முன்னிலையில் நடந்த நிகழ்வில், மாவட்ட ஆட்சித்தலைவர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி, இதனை தொடங்கி வைத்து, பார்வையிட்டார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்