அமைச்சர் முத்துசாமி வீட்டை முற்றுகையிட்ட திமுகவினரால் பரபரப்பு

அமைச்சர் முத்துசாமி வீட்டை முற்றுகையிட்ட திமுகவினரால் பரபரப்பு
X

அமைச்சர் வீட்டின் முன் குவிந்த திமுகவினர்.

ஈரோடு மாநகராட்சி தேர்தலில் போட்டியிட முன்னாள் கவுன்சிலருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதாக வெளியான தகவலையடுத்து அமைச்சர் வீடு முற்றுகை.

ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட 29 வது வார்டில் மோகன்குமார் என்பவருக்கு திமுக சார்பில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டதாக தகவல் பரவியது. இதனையடுத்து 29வது வார்டு முன்னாள் கவுன்சிலர் வீனஸ் பழனிசாமியின் ஆதரவாளர்கள் 100க்கும் மேற்பட்டவர்கள் வீட்டுவசதி துறை அமைச்சர் முத்துசாமி வீட்டை முற்றுகையிட்டனர். மக்களுக்காக உழைத்த முன்னாள் கவுன்சிலர் வீனஸ் பழனிசாமிக்கு மீண்டும் திமுக சார்பில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை வைத்து முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அமைச்சர் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது‌.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா