ஈரோட்டில் அமைச்சர் முத்துசாமி துவக்கி வைத்த மாரத்தான் ஓட்டம்

ஈரோட்டில் அமைச்சர் முத்துசாமி துவக்கி வைத்த மாரத்தான்  ஓட்டம்
X

erode district news-மாரத்தான் ஓட்டம் (பைல் படம்)

erode district news-ஈரோட்டில் நடந்த மாரத்தான் ஓட்டத்தை அமைச்சர் முத்துசாமி துவக்கி வைத்தார்.

erode district news-ஈரோட்டில் மாரத்தான் போட்டி நடந்தது. இதில் தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கொடி அசைத்து மாரத்தான் போட்டியை தொடங்கி வைத்தார்.ஆண்கள், பெண்களுக்கு 10 கிலோ மீட்டர் மற்றும் 5 கிலோ மீட்டர் என இரு பிரிவுகளில் மாரத்தான் போட்டி நடந்தது.

5 கிலோ மீட்டர் தூர மாரத்தான் ஓட்டம் ஈரோடு வ.உ.சி. பூங்காவில் தொடங்கி நரிக்கல் மேடு, வீரப்பன்சத்திரம் வழியாக மீண்டும் வ.உ.சி. பூங்காவில் முடிவடைந்தது. இதேபோல் 10 கிலோ மீட்டர் தூர ஓட்டம் வ.உ.சி. பூங்காவில் தொடங்கி பி.பி.அக்ரஹாரம், கனிராவுத்தர்குளம் வழியாக மீண்டும் வ.உ.சி.பூங்காவில் முடிவடைந்தது.

erode district news-இதைத்தொடர்ந்து வெற்றிபெற்ற வீரர் -வீராங்கனைகளுக்கு பரிசு வழங்கப்பட்டன. மேலும் குழந்தைகளுக்கு 1½ கிலோ மீட்டர் பிரிவிலும் மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது. இந்த போட்டிகளில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 1,300-க்கும் மேற்பட்ட வீரர் -வீராங்கனைகள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
வெப்சைட் ஓபன் பண்ண தெரியலையா? இதோ ஈஸியா கத்துக்கோங்க!