/* */

ஈரோடு: உள்ளாட்சி தேர்தல் பிரசாரம் இன்றுடன் ஒய்வு

ஈரோடு மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு 9-ம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு தேர்தல் பிரசாரம் இன்றுடன் முடிந்தது.

HIGHLIGHTS

ஈரோடு: உள்ளாட்சி தேர்தல் பிரசாரம் இன்றுடன் ஒய்வு
X

பைல் படம்.

தமிழ்நாட்டில் கிராமப்புற உள்ளாட்சி தேர்தலின் போது தேர்தல் நடத்தப்படாத 9 மாவட்டங்களுக்கு 2 கட்டமாக தேர்தல் நடக்கிறது. இத்துடன், ஏற்கனவே தேர்தல் நடத்தப்பட்ட மாவட்டங்களில் காலியாக உள்ள வார்டுகளுக்கும் தற்செயல் தேர்தல் நடத்தப்படுகிறது. அதன்படி 2-வது கட்ட வாக்குப்பதிவு 9-ந் தேதி (சனிக்கிழமை) நடக்கிறது. இந்த 2-வது கட்ட வாக்குப்பதிவுடன், ஈரோடு மாவட்டத்தில் உள்ள 27 வார்டுகளுக்கும் தேர்தல் நடக்கிறது. ஈரோடு மாவட்ட ஊராட்சி வார்டு 5, ஊராட்சி ஒன்றியக்குழு ஈரோடு-4 வது வார்டு, பெருந்துறை 10-வது வார்டு ஆகியவற்றுக்கும் தேர்தல் நடக்கிறது.

அந்தியூர் ஒன்றியத்துக்கு உள்பட்ட சங்கரபாளையம் ஊராட்சி தலைவர், சென்னிமலை ஒன்றியத்துக்கு உள்பட்ட முகாசி புலவன்பாளையம் ஊராட்சி தலைவர், நம்பியூர் ஒன்றியத்துக்கு உள்பட்ட கூடக்கரை ஊராட்சி தலைவர், பெருந்துறை ஒன்றியத்துக்கு உள்பட்ட கருக்குப்பாளையம் ஊராட்சி தலைவர் பதவிக்கும் தேர்தல் நடத்தப்படுகிறது.

இவை தவிர அம்மாபேட்டை ஒன்றியத்தில் பூதப்பாடி ஊராட்சி 4-வது வார்டு, மாணிக்கம்பாளையம் ஊராட்சி 6-வது வார்டு, முகாசிபுதூர் ஊராட்சி 2-வது வார்டு, சிங்கம்பேட்டை ஊராட்சி 5-வது வார்டுகளுக்கும் தேர்தல் நடத்தப்படுகிறது.

அந்தியூர் ஒன்றியம் பிரம்மதேசம் ஊராட்சி 15-வது வார்டு, பவானி ஒன்றியம் ஆண்டிக்குளம் ஊராட்சி 3-வது வார்டு, சின்னப்புலியூர் ஊராட்சி 1-வது வார்டு, ஓடத்துறை ஊராட்சி 7-வது வார்டு, ஒரிச்சேரி ஊராட்சி 9-வது வார்டுகளுக்கும், பவானிசாகர் ஒன்றியம் புங்கார் ஊராட்சி 1-வது வார்டு, நல்லூர் ஊராட்சி 1-வது வார்டுக்கும் தேர்தல் நடக்கிறது.

கொடுமுடி ஒன்றியத்துக்கு உள்பட்ட கொந்தளம் ஊராட்சி 6-வது வார்டு, குளத்துப்பாளையம் ஊராட்சி 6-வது வார்டு, மொடக்குறிச்சி ஒன்றியம் குளூர் ஊராட்சி 2-வது வார்டு, முகாசி அனுமன்பள்ளி ஊராட்சி 4-வது வார்டு, துய்யம்பூந்துறை ஊராட்சி 7-வது வார்டு, நம்பியூர் ஒன்றியம் கூடக்கரை ஊராட்சி 6-வது வார்டு, பெருந்துறை ஒன்றியம் துடுப்பதி ஊராட்சி 11-வது வார்டு, டி.என்.பாளையம் ஒன்றியம் கொண்டையம்பாளையம் ஊராட்சியில் 2 மற்றும் 8-வது வார்டு ஆகியவற்றுக்கும் தற்செயல் தேர்தல் நடக்கிறது.

மாவட்ட ஊராட்சி வார்டு 1, ஒன்றியக்குழு வார்டுகள்-2, ஊராட்சி தலைவர் பதவி -4, ஊராட்சி வார்டுகள் 20 என மொத்தம் 27 வார்டுகளுக்கும் 9-ந் தேதி தேர்தல் நடக்கிறது. 20 ஊராட்சி வார்டுகளில் 7 பேர் ஏற்கனவே போட்டியின்றி கவுன்சிலர்களாக தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். 13 வார்டுகளில் 31 பேர் போட்டியில் உள்ளனர்.

4 ஊராட்சி தலைவர்கள் பதவிக்கு 15 பேர் போட்டியிடுகிறார்கள். ஒன்றியக்குழு 2 வார்டுகளில் 13 பேர் போட்டியிடுகிறார்கள். மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் ஒரு பதவிக்கு 6 பேர் போட்டியில் உள்ளனர். மொத்தம் 20 வார்டுகளில் தேர்தல் நடக்கிறது. 65 பேர் போட்டியில் உள்ளனர்.

9-ந்தேதி தேர்தல் நடைபெறுவதால் இன்று (வியாழக்கிழமை) பிரசாரம் ஓய்கிறது.தேர்தலுக்கு பின்னர் 12-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. அம்மாபேட்டை ஒன்றியத்துக்கு சிங்கம்பட்டை அரசு மேல்நிலைப்பள்ளி, பெருந்துறை ஒன்றியத்துக்கு பெருந்துறை ஊராட்சி ஒன்றிய அலுவலகம், ஈரோடு ஒன்றியத்துக்கு ஈரோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகம், டி.என்.பாளையம் ஒன்றியத்துக்கு டி.என்.பாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், சென்னிமலை ஒன்றியத்துக்கு சென்னிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகம், நம்பியூர் ஒன்றியத்துக்கு நம்பியூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், அந்தியூர் ஒன்றியத்துக்கு அந்தியூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், பவானிசாகர் ஒன்றியத்துக்கு பவானிசாகர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், பவானி ஒன்றியத்துக்கு பவானி வட்டார சேவை மையம் என 9 மையங்களில் வாக்குப்பெட்டிகள் பாதுகாப்பாக வைக்கப்படும். 12-ந் தேதி வாக்குகள் எண்ணப்படும். கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமையில் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து உள்ளனர்.

Updated On: 6 Oct 2021 2:30 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    உலக அளவிலான மாற்றம் : புலிப்பாய்ச்சலில் இந்தியா..!
  2. லைஃப்ஸ்டைல்
    ‘குடும்பத்தில் சுயநலம் பெருகினால், உறவுகள் விலகிப் போகும்’
  3. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணிகளின் இன்றைய நீர்மட்டம்
  4. வீடியோ
    Ameer-ன் படம் பார்க்க Annamalai-யை அழைத்தோம் !#annamalai #annamalaibjp...
  5. கல்வி
    பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்: மாவட்டவாரியாக தேர்ச்சி விகிதம்
  6. லைஃப்ஸ்டைல்
    ‘தூக்கத்தில் வருவதல்ல கனவு; உன்னை தூங்க விடாமல் செய்வதே கனவு’ - கலாம்...
  7. பூந்தமல்லி
    தண்ணீர் தொட்டில் விழுந்து 3 வயது சிறுமி உயிர்ழப்பு
  8. கல்வி
    பரீட்சையில் Fail ஆகிட்டா, தோத்துட்டோம்ன்னு அர்த்தமா...?
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. ஆன்மீகம்
    காக்கும் கடவுள் கணேசனை நினை... கவலைகள் அகல அவன் அருள் துணை!