ஈரோட்டில் 178 வழக்குகளில் 240 பவுன் மீட்பு: போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன்
பைல் படம்.
ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசி மோகன் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது:
ஈரோடு மாவட்டத்தில் தொடர்ந்து நடந்து வரும் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் மாவட்ட, மாநில எல்லைகளில் கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டு தீவிர வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒவ்வொரு போலீஸ் சப் டிவிசன்களிலும் இரு சக்கர வாகன ரோந்து போலீசார் நியமித்து, அதிகப்படியான ரோந்துகள் மேற்கொள்ளப்படுகிறது. மேலும் திருட்டு, வழிப்பறி போன்ற சம்பவங்களில் களவு பொருட்களை மீட்க கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில் குற்றப்பிரிவு தனிப்படை அமைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை திருட்டு மற்றும் வழிப்பறி என மாவட்டத்தில் மொத்தம் 275 குற்றவழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதில், 178 வழக்குகளில் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டு உள்ளனர். மேலும் இந்த வழக்குகளில் 240 பவுன் தங்க நகைகள் மற்றும் 15 கால்நடைகள் உள்பட ரூ.1 கோடியே 3 லட்சத்து 64 ஆயிரத்து 418 மதிப்பிலான களவு சொத்துகள் மீட்கப்பட்டு உள்ளது. இதுபோன்ற குற்ற தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து ஈரோடு மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் தெரிவித்து உள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu