வாக்கு எண்ணிக்கைக்காக 77 மதுக்கடைக்கு 'பூட்டு' : 'குடி'மகன்கள் சோகம்

வாக்கு எண்ணிக்கைக்காக 77 மதுக்கடைக்கு பூட்டு : குடிமகன்கள் சோகம்
X

கோப்பு படம் 

உள்ளாட்சி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடப்பதால், ஈரோடு மாவட்டத்தில் 77 டாஸ்மாக் கடைகள் இன்று மூடப்பட்டுள்ளன.

ஈரோடு மாவட்டத்தில் காலியாக உள்ள 20 உள்ளாட்சிப் பதவிகளுக்கு 65 பேர் போட்டியிடுகின்றனர். கடந்த 9ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது. அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியம் தவிர மற்ற இடங்களில், அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கூட்ட அரங்கில் வாக்குப் பெட்டிகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

வாக்கு எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை இன்று நடைபெறுகிறது. இதனால், வாக்கு எண்ணிக்கை நடக்கும் மையத்தில் இருந்து 5 கி.மீ. சுற்றளவுக்குள் மதுபானக்கடைகள் இயங்கக் கூடாது என்ற விதிப்படி ஈரோடு மாவட்டத்தில் 77 டாஸ்மாக் கடைகள், பார்களுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
ai in future agriculture