ஈரோடு மாவட்டத்தில் தொடந்து 3வது நாளாக கன மழை

ஈரோடு மாவட்டத்தில் தொடந்து 3வது நாளாக கன மழை
X

கனமழையால் சாலையில் தேங்கி கிடக்கும் மழைநீர். 

ஈரோடு மாவட்டத்தில் தொடந்து 3வது நாளாக கன மழை பெய்தது. கவுந்தப்பாடியில் அதிகபட்சமாக 44.4 மீ.மி மழை பதிவுவாகியது.

ஈரோடு மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக பலத்த மழை பெய்தது. குறிப்பாக நேற்று முன்தினம் ஈரோடு மாநகர் பகுதியில் 5 மணி நேரம் மழை கொட்டி தீர்த்தது. இதனால் பெரும்பாலான பகுதியில் மழைநீர் தேங்கி சேறும் சகதியுமாக காட்சி அளித்து. மேலும் போக்குவரத்து ஸ்தம்பித்தது. பல்வேறு வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.

இதேபோல் மாவட்டம் முழுவதும் விடிய விடிய மழை கொட்டி தீர்த்தது. குறிப்பாக பவானி, கொடுமுடி அப்பகுதியில் பலத்த மழையும், கவுந்தப்பாடி பகுதியில் வரலாறு காணாத மழையும் பதிவாகியிருந்தது. குறிப்பாக கவுந்தப்பாடியில் அதிகபட்சமாக 44.4 மி. மீட்டர் மழை பதிவாகி இருந்தது. இதேபோல்பவானிசாகர், கொடிவேரி, பெருந்துறை, சென்னிமலை, கோபி, நம்பியூர், குண்டேரிப்பள்ளம் பகுதியிலும் பலத்த மழை பெய்தது. தொடர்ந்து மூன்று நாட்களாக மழை பெய்து வருவதால் மாவட்டத்தில் புறநகர் பகுதியில் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.

ஈரோட்டில் நேற்று இரவு பெய்த மழை மில்லி மீட்டரில் வருமாறு:

கவுந்தப்பாடி - 44.4,

பவானிசாகர் - 29.8,

கொடிவேரி -27.4,

பெருந்துறை - 27,

சென்னிமலை - 21,

கோபி - 16.4,

நம்பியூர் - 14,

குண்டேரிபள்ளம் - 10.2,

தாளவாடி - 4,

சத்தியமங்கலம் - 4,

ஈரோடு - 2,

வரட்டுப்பள்ளம் - 1.6,

மொடக்குறிச்சி-1.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil