ஈரோட்டில் சிசிடிவி பொருத்துதல் மற்றும் பழுது பார்த்தல் தொடர்பான இலவச பயிற்சி

ஈரோட்டில் சிசிடிவி பொருத்துதல் மற்றும் பழுது பார்த்தல் தொடர்பான இலவச பயிற்சி
X

கனரா வங்கி சார்பில் வெளியிட்ட அறிவிப்பு.

கனரா வங்கி கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் சார்பில், சிசிடிவி பொருத்துதல், பழுது பார்த்தல் இலவச பயிற்சி‌யில் சேர அழைப்பு.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஊராட்சி பகுதிகளில் வசிக்கும் நபர்களுக்கு வேலை வாய்ப்பு தரக்கூடிய இலவச தொழிற் பயிற்சி அளிக்கப்படுகிறது. இப்பயிற்சியின் போது இலவசமாக சிசிடிவி கேமரா பொருத்துதல் மற்றும் பழுது பார்த்தல் தொடர்பான பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. பயிற்சியானது (15.02.2022 முதல் 02.03.2022 வரை) மொத்தம் 13 நாள் நடைபெறும். எழுத படிக்கத் தெரிந்த 18 முதல் 45 வயதுக்கு உட்பட்ட ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.

இந்த பயிற்சி முற்றிலும் இலவசமாக அளிக்கப்படும். பயிற்சியின்போது சீருடை, உணவு வழங்கப்படும். பயிற்சியின் முடிவில் மத்திய அரசின் அனுமதி பெற்ற சான்றிதழ்களும், சுய தொழில் துவங்க வங்கி கடன் ஆலோசனையும் வழங்கப்படும். இதில் சேர விரும்புவோர் "கனரா வங்கி கிராமப்புற வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம், ஆஸ்ரம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகம் 2-ம் தளம், கொல்லம்பாளையம் பைபாஸ் ரோடு, ஈரோடு - 638002" என்ற முகவரியில் மையத்தை நேரில் தொடர்பு கொள்ளவும். கூடுதல் விவரங்களுக்கு 0424-2400338, 8778323213, 7200650604 என்ற எண்களிலும் தொடர்பு கொள்ளலாம்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்