ஈரோடு அருகே கார் தீப்பிடித்து எரிந்ததில் 3 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிப்பு

ஈரோடு அருகே கார் தீப்பிடித்து எரிந்ததில் 3 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிப்பு
X

தீப்பிடித்து எரிந்து சேதமான கார்.

ஈரோடு அருகே கார் தீப்பிடித்து எரிந்ததில் 3 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

ஈரோடு அடுத்த மூலப்பாளையம் அருகே உள்ள பாரதிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் 43, நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது மனைவி கவிதா (36) மகள் மிதுன்ஷா (5). குடும்பத்துடன் நேற்று மாலை குலதெய்வம் கோயிலுக்கு காரில் சென்றுள்ளனர்.

மூலப்பாளையம் அடுத்த ஆனைக்கல்பாளையம் அருகே செல்லும்போது காரின் முன் பகுதியிலிருந்து புகை வந்துள்ளது. உடனடியாக மூவரும் காரில் இருந்து வெளியே வந்தனர். அப்போது கார் மளமளவென தீ பிடித்து எரிந்தது.

இதுகுறித்து மொடக்குறிச்சி தீயணைப்புத் துறையினருக்கு கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். ஆனால் கார் முற்றிலும் தீப்பிடித்து எரிந்து சாம்பலானது. இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா