பட்டாசு விற்பனை உரிமத்திற்கு விண்ணப்பிக்க கால நீட்டிப்பு: மாவட்ட வருவாய் அதிகாரி தகவல்

பட்டாசு விற்பனை உரிமத்திற்கு விண்ணப்பிக்க கால நீட்டிப்பு: மாவட்ட வருவாய் அதிகாரி தகவல்
X
பட்டாசு விற்பனை செய்ய தற்காலிக உரிமம் கோரி விண்ணப்பிக்க கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக வருவாய் அதிகாரி முருகேசன் தகவல்.

ஈரோடு மாவட்ட வருவாய் அதிகாரி முருகேசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது:-

தீபாவளி பண்டிகையினை முன்னிட்டு பட்டாசு விற்பனை செய்ய தற்காலிக உரிமம் கோரி விண்ணப்பிக்க விரும்பும் சிறு வணிகர்களின் நலன் கருதி தீபாவளி பண்டிகைக்கு முன்னதாகவே அவர்களது வியாபாரத்தை தொடங்குவதற்கு ஏதுவாக இணையதளம் மூலமாக விண்ணப்பம் செய்யவும், உரிமங்களை பெற்றுக் கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

அதன்படி உரிய ஆவணங்களுடன் அங்கீகரிக்கப்பட்ட இ-சேவை மையங்களில் சேவை கட்டணமாக ரூ.500 செலுத்தி விண்ணப்பம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பங்களை கடந்த மாதம் 30-ந்தேதி வரை பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இணையதளம் மூலமாக விண்ணப்பம் செய்ய வருகின்ற 22-ந்தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!