வீரப்பன்சத்திரம் அரசு பள்ளியில் சன்ஷேடு சிலாப் இடிந்து விழுந்தது

வீரப்பன்சத்திரம் அரசு பள்ளியில் சன்ஷேடு சிலாப் இடிந்து விழுந்தது
X

பள்ளியின் சன்சைடு சிலாப் இடிந்து விழுந்தது

ஈரோடு வீரப்பன்சத்திரம் பகுதியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சன்ஷேடு சிலாப் இடிந்து விழுந்ததால் பெற்றோர்கள் போராட்டம்

ஈரோடு வீரப்பன்சத்திரம், குட்டைமேடு வீதியில் மாசிமலை ரங்கசாமி கவுண்டர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை 400-க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று விடுமுறை முடிந்து இன்று காலை பள்ளிக்கு வந்து மாணவிகள் பார்த்தபோது, பள்ளி கட்டிடத்தின் இரண்டு இடத்தில் சிமெண்ட் சிலாப் இடிந்து விழுந்தது தெரியவந்தது.


இதனையடுத்து, தகவலறிந்து வந்த 15-க்கும் மேற்பட்ட மாணவிகளின் பெற்றோர்கள் பள்ளி வளாகத்தில், தரையில் அமர்ந்து பழுதடைந்த கட்டிடத்தை சீர்படுத்தி தரக்கோரியும், கழிப்பிட வசதியை ஏற்படுத்தித் தரக்கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


இது குறித்து தகவல் கிடைத்ததும் ஈரோடு வீரப்பன்சத்திரம் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பெற்றோரிடம் பேச்சு வார்த்தை நடத்தியதை தொடர்ந்து, போராட்டம் கைவிடப்பட்டது. இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!