சுருள்வாள்- ஒற்றைக்கம்பு சுற்றி உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த ஈரோடு மாணவர்

சுருள்வாள்- ஒற்றைக்கம்பு சுற்றி உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த ஈரோடு மாணவர்
X

 உலக சாதனைப் படைத்த ஈரோடு  மாணவர் எஸ்.செங்கதிர்வேலனுக்கு, விருது மற்றும் அங்கீகார சான்றுவழங்கப்பட்டது

ஒரு மணி நேரம் பத்து நிமிடம், சுருள்வாள் மற்றும் ஒற்றைக் கம்பு சிலம்பம் தொடர்ந்து சுற்றி நோபல் உலக சாதனை படைத்தார்

சுருள்வாள், ஒற்றைக்கம்பு சுற்றி ஈரோடு மாணவர் நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார்.

ஒரு மணி நேரம் பத்து நிமிடம், சுருள்வாள் மற்றும் ஒற்றைக் கம்பு சிலம்பம் தொடர்ந்து சுற்றி நோபல் உலக சாதனை புத்தகத்தில் ஈரோடு மாணவர் எஸ். செங்கதிர் வேலன் இடம் பிடித்து சாதனைப்படைத்தார்.

புத்தாஸ் சிலம்பம்பாட்ட டிரஸ்ட் மற்றும் ஈரோடு மாவட்ட சிலம்பாட்ட கழகமும் இணைந்து நடத்திய நோபல் உலக சாதனை நிகழ்ச்சி, மாமரத்துபாளையம் சக்தி மசாலா நிறுவன அரங்கில் நடந்தது. இதில், மாணவர் எஸ். செங் கதிர்வேலன்(9) கலந்து கொண்டு, சுருள்வாள் மற்றும் ஒற்றைக்கம்பு சிலம்பம் ஆகியவற்றில் 1 மணி நேரம் 10 நிமிடம் தொடர்ந்து சுற்றி நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்று சாதனை படைத்தார்.

சக்தி மசாலா நிறுவனர்கள் பி.சி.துரைசாமி, டாக்டர் சாந்திதுரைசாமி ஆகியோர் முன்னிலையில் நடந்த இந்த நிகழ்ச்சியில், நோபல் உலக சாதனை புத்தக தலைமை இயக்க அதிகாரி கே.கே.வினோத், தமிழ்நாடு நடுவர் எம்.கே.பரத்குமார் ஆகியோர் உலக சாதனைப் படைத்த மாணவர் எஸ்.செங்கதிர்வேலனுக்கு, விருது மற்றும் அங்கீகார சான்றுவழங்கினர்.

நிகழ்ச்சியில் மாணவர் பெற்றோர் டி.செந்தில்குமார், தீபா செந்தில்குமார், தலைமை பயிற்சியாளரும், ஈரோடு மாவட்ட சிலம்பாட்ட கழக செயலாளர் ஆர். கந்தவேல் மற்றும் துணை பயிற்சியாளர் ஏ.மணி, எம்.ஆறுமுகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ஆசிரியர்களுக்கு உதவியாக மொபைல் செயலி: வேலை சுமையை குறைக்க புதிய முயற்சி..!