ஈரோடு சம்பத் நகர் சாலைக்கு குமரன் சாலை என பெயர் மாற்றம்: முதல்வர் உத்தரவு

ஈரோடு சம்பத் நகர் சாலைக்கு குமரன் சாலை என பெயர் மாற்றம்: முதல்வர்  உத்தரவு
X

ஈரோடு மாநகர் பகுதியிலுள்ள பிரதான சாலைக்கு தியாகி குமரன் சாலை சம்பத் நகர், என பெயர் மாற்றம் செய்து முதலமைச்சர் ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

ஈரோடு மாநகரிலுள்ள சம்பத் நகர் பிரதான சாலைக்கு தியாகி குமரன் சாலை என பெயர் மாற்றம் செய்து முதல்வர் ஸ்டாலின் திறப்பு

ஈரோடு மாநகர் பகுதியிலுள்ள பிரதான சாலைக்கு தியாகி குமரன் சாலை சம்பத் நகர், என பெயர் மாற்றம் செய்து முதலமைச்சர் ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

சுதந்திரப்போராட்ட தியாகி கொடி காத்த குமரனின் 118வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பல்வேறு தரப்பினறும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். கொடிகாத்த குமரனை மேலும் கௌரவிக்கும் வகையில் ஈரோடு மாநகர் பகுதியின் முக்கிய பிராதான சாலைகளின் ஒன்றான சம்பத் நகர் சாலைக்கு "தியாகி குமரன் சாலை சம்பத் நகர்" என புதிதாக பெயர் மாற்றம் செய்து அறிவிக்கும் நிகழ்ச்சி ஈரோடு மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் ,காணொளி காட்சி வாயிலாக பங்கேற்ற தமிழக முதல்வர் ஸ்டாலின் பெயர் பலகையை திறந்து வைத்தார். இதில், தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி , மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி , கிழக்கு தொகுதி எம்எல்ஏ திருமகன் ஈவெரா, மாநில கொள்கை பரப்பு இணைச் செயலாளர் வி.சி.சந்திரகுமார், திமுக மாவட்ட துணைச் செயலாளர் செந்தில், செங்குந்தர் மகாஜன சங்க பொது செயலாளர் சோள ஆசைத்தம்பி, செங்குந்தர் கல்விக்கழக தாளாளர் சிவானந்தம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai based agriculture in india