ஈரோட்டில் ஜனவரி 21 இல் தனியார் வேலைவாய்ப்பு முகாம்.. இளைஞர்கள் பங்கேற்க அழைப்பு...
ஈரோட்டில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுவது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்ட செய்திக் குறிப்பு விவரம் வருமாறு:
ஈரோடு மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம், தமிழ்நாடு மாநில ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் ஆகியவை சார்பில், தனியார் வேலைவாய்ப்பு முகாம் ஜனவரி 21ஆம் தேதி ஈரோட்டில் நடைபெறுகிறது. ஈரோடு நந்தா கலை அறிவியல் கல்லூரியில் நடைபெறும் இந்த முகாமில் வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் கணேசன் ஆகியோர் கலந்துகொண்டு பணி நியமன ஆணையை வழங்க உள்ளனர்.
இந்த வேலை வாய்ப்பு முகாமில் 200-க்கும் மேற்பட்ட தனியார் வேலை அளிப்பவர்கள் கலந்து கொண்டு பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட காலி பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். மேலும், முகாமில் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் முதல் பிளஸ் டு தேர்ச்சி பெற்றவர்கள், பட்டதாரிகள், பட்டயப்படிப்பு முடித்தவர்கள், ஐடிஐ, தொழிற்கல்வி பயின்றவர்கள், பொறியாளர்கள், கணினி இயக்குவோர், வாகன ஓட்டுநர்கள், தையல் கலைஞர்கள் என அனைத்து தரப்பினரும் கலந்துகொண்டு தங்களுக்கு தகுதியான வேலையை தேர்வு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தனியார் வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள அனுமதி இலவசம் ஆகும். முகாமின் போது தொழில் முனைவோருக்கான ஆலோசனைகள் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி சார்பில் வங்கி கடன் குறித்த வழிகாட்டுதல்கள் ஆகியவை வழங்கப்படுகிறது. தனியார் துறையில் பணிபுரிய ஆர்வம் உள்ளவர் இந்த முகாமில் கலந்து கொள்ளலாம்.
முகாமில் கலந்து கொள்ள விரும்புவோர் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்து பதிவு செய்ய வேண்டும். முகாமில் தேர்ந்தெடுக்கப்படும் தனியார் துறை பணியாளர்களுக்கு எந்த வித காரணத்தை கொண்டும் வேலை வாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படாது. இந்த முகாம் தொடர்பான மேலும் விவரங்களுக்கு 0424-2275860 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்து உள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu