கோபியில் தடை மீறல்..! புகையிலை பொருட்கள் விற்ற பெட்டிக்கடைக்காரர் கைது..!

கோபியில் தடை மீறல்..! புகையிலை பொருட்கள் விற்ற பெட்டிக்கடைக்காரர் கைது..!
X
கோபியில் தடை மீறல். புகையிலை பொருட்கள் விற்ற பெட்டிக்கடைக்காரர் கைது.அதை பற்றி இப்பதிவில் காணலாம்.

திங்களூரில் புகையிலை பொருட்கள் விற்பனை

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள திங்களூர் அருகே பெரிய வீரசங்கிலி பகுதியில் ஒரு பெட்டிக்கடையில் புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக திங்களூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

போலீசார் சோதனை

அதன் பேரில் போலீசார் நேற்று முன்தினம் (ஜனவரி 4) அங்கு சென்று சோதனை நடத்தினார். இதில் 32 பாக்கெட் புகையிலை பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

கடை உரிமையாளர் கைது

இதைத்தொடர்ந்து கடை உரிமையாளரான சுப்பிரமணியம் (வயது 74) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் கடையில் இருந்த 32 பாக்கெட் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Tags

Next Story
கோபி பாரியூரில் குண்டம் திருவிழா..! பக்தர்களின் உற்சாக பார்வையில் கடவுளின் அருளுடன்..!