மாநில அளவிலான கலைத் திருவிழா..! ஈரோட்டில் இன்று தொடக்கம்..!

மாநில அளவிலான கலைத் திருவிழா..! ஈரோட்டில் இன்று தொடக்கம்..!
X
மாநில அளவிலான கலைத் திருவிழா. ஈரோட்டில் இன்று தொடக்கம்.அதை பற்றி இப்பதிவில் காணலாம்.

மாணவா்களின் கலைத்திறனை மேம்படுத்தும் வகையில் பள்ளிக்கல்வித் துறை சாா்பில் கலைத் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1- ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான கலைத் திருவிழா கடந்த நவம்பா் 14- ஆம் தேதி முதல் 20- ஆம் தேதி வரை நடைபெற்றது.

மாநில அளவில் 2 நாள்கள் கலைவிழா

இந்தப் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு மாநில அளவிலான கலைத்திருவிழா வெள்ளிக்கிழமை தொடங்கி 2 நாள்கள் நடக்கிறது.

ஈரோடு மாவட்டத்தில் 9 மற்றும் 10-ஆம் வகுப்பு மாணவா்களுக்கான போட்டி

அதன்படி 9- ஆம் வகுப்பு, 10- ஆம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கான கலைத் திருவிழா ஈரோடு மாவட்டத்தில் நடத்தப்படுகிறது.

ஈரோடு மற்றும் சென்னிமலையில் போட்டிகள்

ஈரோடு அருகே நஞ்சனாபுரம் கொங்கு கலை, அறிவியல் கல்லூரி, சென்னிமலை அருகே ஈங்கூா் இந்துஸ்தான் அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரி, கங்கா மெட்ரிக் பள்ளி, கங்கா மேல்நிலைப் பள்ளி ஆகிய இடங்களில் நடத்தப்படும் போட்டியில் மொத்தம் 4,811 மாணவ, மாணவிகள் பங்கேற்கின்றனா்.

வெற்றியாளா்களுக்கு தமிழக முதல்வா் விருது

இந்தப் போட்டியில் வெற்றி பெறுபவா்களுக்கு தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் கலையரசன், கலையரசி பட்டங்களை வழங்குகிறாா். மேலும் அவா்கள் வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவா்.

Tags

Next Story