நந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அறிவியல் திருவிழா..!
இடம் ஈரோடு நந்தா கலை மற்றும் அறிவியல் (தன்னாட்சி) கல்லூரி
நிகழ்வு அறிவியல் திருவிழா
ஏற்பாடு உயிர் தொழில்நுட்பம், வேதியியல், இயற்பியல், கணித துறைகள் சார்பில் இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை
தொடக்க விழா
அறிவியல் திருவிழாவின் தொடக்க நிகழ்வுக்கு ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளையின் தலைவர் வி.சண்முகன் தலைமை வகித்தார். ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளையின் பொருளாளர் எஸ்.பானுமதி சண்முகன் முன்னிலை வகித்து குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தார். கல்லூரி முதல்வர் சு.மனோகரன் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளர்கள்
விழாவில் சிறப்பு அழைப்பாளராக ஏஎம்ஈடி பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ராஜேந்திரன், சென்னை இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையத்தின் விஞ்ஞானி எஸ்.சிவகுமார், மைசூர் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மோவாசிங் ஆகியோர் பங்கேற்று அறிவியலால் நாடு மற்றும் உலகம் அடைந்த முன்னேற்றம் குறித்தும், தங்களது அறிவியல் ஆராய்ச்சி அனுபவங்கள் குறித்தும் பகிர்ந்து கொண்டனர்.
நிர்வாகத்தினர் உரை
ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளையின் செயலாளர் எஸ்.நந்தகுமார் பிரதீப், நந்தா கல்வி நிறுவனங்களின் செயலாளர் எஸ்.திருமூர்த்தி, முதன்மை கல்வி அலுவலர் எஸ்.ஆறுமுகம், நிர்வாக அலுவலர் வி.சி.சீனிவாசன் ஆகியோர் பேசினர்.
பேச்சாளர்கள்
5 நாள்கள் நடைபெற்ற அறிவியல் திருவிழாவில் 20-க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் பங்கேற்று பல்வேறு தலைப்புகளில் பேசினர்.
பங்கேற்பாளர்கள்
இதில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள 15 பள்ளிகளைச் சேர்ந்த 150 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
ஏற்பாடுகள்
விழாவுக்கான ஏற்பாடுகளை உயிர்த் தொழில் நுட்பவியல் துறையின் தலைவர் அப்துல், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் செய்திருந்தனர்.
நன்றி உரை
இணைப் பேராசிரியர் எஸ்.கார்த்திக் நன்றி கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu