ஈரோடு மாநகர் முழுவதும் வரும் 16ம் தேதி மின் விநியாேகம் நிறுத்தம்

ஈரோடு மாநகர் முழுவதும் வரும் 16ம் தேதி மின் விநியாேகம் நிறுத்தம்
X
மின்பாதைகளில் பராமரிப்பு பணிகள் நடப்பதையொட்டி வரும் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது

ஈரோடு 110–22 கி.வோ. துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் 16.10.2021 (சனிக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்கண்ட பகுதிகளில் மின்சாரம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு நகர் முழுவதும், சூரம்பட்டிவலசு, வீரப்பன் சத்திரம், இடையன் காட்டு வலசு, முனிசிபல் காலனி, டீச்சர்ஸ் காலனி ,பெருந்துறை ரோடு, வெட்டுக்காட்டு வலசு, மாணிக்கம்பாளையம், சம்பத் நகர், பாண்டியன் நகர், சக்தி நகர், ஆண்டிக்காடு, வக்கீல் தோட்டம், பெரிய சேமூர், ராம் நகர், கருங்கல்பாளையம், பழையபாளையம், பெரியவலசு,பாப்பாத்திக்காடு, பாரதிதாசன்வீதி, முனியப்பன் கோவில்வீதி, கொத்துக்காரன் தோட்டம் , 16ரோடு, நாராயணன் வலசு, குமலன்குட்டை, டவர் லைன் காலனி, திருமால் நகர், அசோக புரம், வைராப்பாளையம், மூலப் பட்டறை, பெரியார் நகர், சத்தி ரோடு, கே.என்.கே. ரோடு, நேதாஜி ரோடு, காந்திஜி ரோடு, ஈ.வி.என். ரோடு, மேட்டூர் ரோடு ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது. மேற்கண்ட தகவலை செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
ai in future agriculture