வேலுநாச்சியார் போல வேடமணிந்த மகளுடன் வந்து வேட்புமனு தாக்கல் செய்த தேமுதிக வேட்பாளர்

வேலுநாச்சியார் போல வேடமணிந்த மகளுடன் வந்து வேட்புமனு தாக்கல் செய்த தேமுதிக வேட்பாளர்
X

வேலுநாச்சியார் போல வேடமணிந்த மகளுடன் வந்து வேட்புமனு தாக்கல் செய்த தேமுதிக வேட்பாளர்

ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட 25வது வார்டில் தேமுதிக சார்பில் தேமுதிக மாவட்ட தொழிற்சங்க செயலாளர் ஈ.ஆர்.டி. மூர்த்தி போட்டியிடுகிறார்.

தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெறுகிறது. இதற்காக தேமுதிக, திமுக, அதிமுக, பாரதியஜனதா, காங்கிரஸ் உள்பட அனைத்து கட்சிகளும் தங்களுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து கட்சிகளின் வேட்பாளர்களும், சுயேட்சை வேட்பாளர்களும் தங்களுக்கான வேட்பு மனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். அந்த வரிசையில் ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட 25வது வார்டில் தேமுதிக சார்பில் தேமுதிக மாவட்ட தொழிற்சங்க செயலாளர் ஈ.ஆர்.டி. மூர்த்தி போட்டியிடுகிறார். இதற்காக தனது மகள் மெய்ரித்திகாவிற்கு வேலுநாச்சியர் போல வேடம் அணிவித்து அவருடன் வந்து இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். முன்னதாக, வீரப்பன்சத்திரம் மாரியம்மன் கோவிலில் சிறப்பு அர்ச்சனை செய்த வேட்பாளர் ஈ.ஆர்.டி.மூர்த்தி, அப்துல்கலாம் கண்ட கனவு நிறைவேறும் வகையில், அனைவர் வீட்டிலம் வேலுநாச்சியரை போல குழந்தைகளை வளர்க்க வேண்டும் என்பதற்கு முன்னுதாரணமாக, தனது குழந்தைக்கு இந்த வேடம் அணிவித்து அழைத்து வந்ததாக தெரிவித்தார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!