ஈரோடு மாவட்டத்தில் இன்று 40 ஆயிரத்து 300 பேருக்கு கொரோனா தடுப்பூசி

ஈரோடு மாவட்டத்தில் இன்று 40 ஆயிரத்து 300 பேருக்கு கொரோனா தடுப்பூசி
X
ஈரோடு மாவட்டத்தில் இன்று 187 மையங்களில் 40,300 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது.
கொரோனா பெருந்தொற்றை தடுக்க, தடுப்பூசி செலுத்தும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை, நான்கு கட்டங்களாக மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றுள்ளன.

ஈரோடு மாவட்டத்தை பொருத்தவரை, இதுவரை 16 லட்சத்து 22 ஆயிரத்து 712 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) 187 இடங்களில் 40 ஆயிரத்து 300 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. இதில் ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட 10 நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் 41 இடங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படவுள்ளதாக, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags

Next Story
highest paying ai jobs