ஈரோடு மாவட்டத்தில் நாளை (9ம் தேதி) 268 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்

ஈரோடு மாவட்டத்தில் நாளை (9ம் தேதி) 268 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்
X

பைல் படம்

ஈரோடு மாவட்டத்தில் நாளை (9ம் தேதி) 268 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

கொரோனா பெருந்தொற்றை தடுக்க தடுப்பூசி செலுத்தும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை நான்கு கட்டங்களாக மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றுள்ளன. ஐந்தாம் கட்டமாக தடுப்பூசி முகாம் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் ஒரு லட்சத்து 25 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் நாளை (சனிக்கிழமை) 268 இடங்களில் 42 ஆயிரத்து 300 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. இதில் ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட 10 நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் 27 இடங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படவுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவுத்துள்ளது.

Tags

Next Story
தேய்பிறை அஷ்டமி விழா கோலாகலம்: மல்லசமுத்திரம் காலபைரவர் கோயிலில் சிறப்பு வழிபாடு