/* */

ஈரோடு மாவட்டத்தில் நாளை 260 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்

ஈரோடு மாவட்டத்தில் நாளை (வியாழக்கிழமை) 40 ஆயிரத்து 100 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படவுள்ளன.

HIGHLIGHTS

ஈரோடு மாவட்டத்தில் நாளை 260 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்
X

கொரோனா பெருந்தொற்றை தடுக்க தடுப்பூசி செலுத்தும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை ஐந்து கட்டங்களாக மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றுள்ளன.

ஈரோடு மாவட்டத்தில் நாளை (வியாழக்கிழமை) 260 இடங்களில் 40 ஆயிரத்து 100 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. இதில் ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட 10 நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் 23 இடங்களில் 8 ஆயிரத்து 500 பேருக்கும், ஈரோடு புறநகர் பகுதிகளில் 6 இடங்களில் ஆயிரத்து 700 பேருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படவுள்ளன.

மொடக்குறிச்சி சுற்று வட்டாரத்தில் 8 இடங்களில் 2 ஆயிரத்து 500 பேருக்கும்,

கொடுமுடி சுற்று வட்டாரத்தில் 13 இடங்களில் 2 ஆயிரத்து 500 பேருக்கும்,

சென்னிமலை சுற்று வட்டாரத்தில் 7 இடங்களில் 2 ஆயிரத்து 150 பேருக்கும்,

திங்களூர் சுற்று வட்டாரத்தில் 15 இடங்களில் 2 ஆயிரத்து 500 பேருக்கும்,

சத்தி சுற்று வட்டாரத்தில் 8 இடங்களில் ஆயிரத்து 850 பேருக்கும்,

புளியம்பட்டி சுற்று வட்டாரத்தில் 6 இடங்களில் 2 ஆயிரத்து 350 பேருக்கும்,

நம்பியூர் சுற்று வட்டாரத்தில் 8 இடங்களில் 2 ஆயிரத்து 200 பேருக்கும்,

கோபி சுற்று வட்டாரத்தில் 11 இடங்களில் 2 ஆயிரத்து 950 பேருக்கும்,

டி.என்.பாளையம் சுற்று வட்டாரத்தில் 6 இடங்களில் ஆயிரத்து 750 பேருக்கும்,

அந்தியூர் சுற்று வட்டாரத்தில் 10 இடங்களில் 2 ஆயிரத்து 450 பேருக்கும்,

அம்மாபேட்டை சுற்று வட்டாரத்தில் 10 இடங்களில் 2 ஆயிரத்து 850 பேருக்கும்,

பவானி சுற்று வட்டாரத்தில் 14 இடங்களில் 3 ஆயிரத்து 150 பேருக்கும்,

தாளாவடி சுற்று வட்டாரத்தில் 11 இடங்களில் 800 பேருக்கும் என மொத்த 40 ஆயிரத்து 100 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படவுள்ளன.

Updated On: 13 Oct 2021 2:45 PM GMT

Related News