ஈரோடு மாவட்டத்தில் இன்று 85 பேருக்கு கொரோனா பாதிப்பு

கோப்பு படம்
ஈரோடு மாவட்டத்தில், நேற்று 8 ஆயிரத்து 187 பேருக்கு பரிசோதனை செய்ததில், 90 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது. இந்த நிலையில் இன்று சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்ட பட்டியலின்படி, ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 85 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,02,511 ஆக உயர்ந்தது.
அதேநேரத்தில், பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 105 பேர் நேற்று சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 1,00,792 பேர் கொரோனா தொற்றில் இருந்து மீட்டுள்ளனர். மாவட்டத்தில் இன்று ஒருவர் உயிரிழந்துள்ளனர். மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு, 674 பேர் பலியாகி உள்ள நிலையில், தற்போது தொற்றுள்ள 1,045 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu