ஈரோட்டில் கால்நடைகளுக்கு 2ம் சுற்று கோமாரி நோய் தடுப்பூசி முகாம்
இது குறித்து, மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி கூறியிருப்பதாவது: ஈரோடு மாவட்டத்தில் உள்ள கால்நடைகளை கோமாரி நோய் தாக்கத்தில் இருந்து தடுக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தேசிய கால்நடை நோய் தடுப்புத் திட்டத்தின்கீழ், கோமாரி நோய் தடுப்பூசி பணிகள் கால்நடை பராமரிப்புத்துறை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
வரும் 10.11.2021 முதல், தொடர்ச்சியாக 21 நாட்களுக்கு ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து வருவாய் கிராமங்கள் குக்கிராமங்கள், பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சி ஆகியவற்றில் தேசிய கால்நடை நோய் தடுப்புத் திட்டத்தின்கீழ் (NADCP) இரண்டாவது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு, தடுப்பூசி பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.
இதற்காக ஈரோடு மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறையின், மண்டல இணை இயக்குநர் அலுவலகத்துக்கு 2.80 இலட்சம் டோஸ் தடுப்பூசி மருந்துகள் பெறப்பட்டு, மருந்துகள் ஈரோடு கால்நடை நோய் புலனாய்வு பிரிவில் உள்ள குளிரூட்டப்பட்ட அறையில் (Walk in cool Room) பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
எனவே ஈரோடு மாவட்டத்தில் உள்ள கால்நடை வளர்ப்போர் இத்தடுப்பூசி முகாம்களை பயன்படுத்தி கால்நடைகளுக்கு தடுப்பூசி போட்டுக் கொண்டு கோமாரி நோயிலிருந்து தங்களது கால்நடைகளை பாதுகாத்துக் கொள்ளுமாறு, ஆட்சித்தலைவர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu