எதிர்க்கட்சியில் நிலவும் குழப்பமான சூழல் எங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது

எதிர்க்கட்சியில் நிலவும் குழப்பமான சூழல் எங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது
X

பைல் படம்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிட நாங்கள் வற்புறுத்தினோம் என்றார் எம்பி திருநாவுக்கரசர்

எதிர்க்கட்சியில் நிலவும் குழப்பமான சூழல் எங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது என திருநாவுக்கரசர் எம்.பி. கூறினார். புதுக்கோட்டை புதுக்கோட்டையில் திருநாவுக்கரசர் எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிட நாங்கள் வற்புறுத்தினோம். அவரது வெற்றிக்காக நாங்கள் பாடுபடுவோம். தோழமை கட்சிகளும் ஆதரவை தந்து பணியாற்ற தொடங்கி விட்டனர். கடந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் இருந்ததை விட தற்போது உள்ள இடைத்தேர்தலில் நல்ல சாதகமான சூழ்நிலை உள்ளது. தி.மு.க.வின் இந்த 1½ ஆண்டுகால ஆட்சி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது.

ஆட்சியில் ஏராளமான பணிகள் மக்களுக்கு செய்யப்பட்டுள்ளன. அந்த தொகுதியில் இளங்கோவன் குடும்பத்தினருக்கு அனுதாபமும் உள்ளது. அ.தி.மு.க. பல கூறுகளாக உடைந்து கிடக்கிறது. யார் போட்டியிடுவார்கள் என்பதை கூட அ.தி.மு.க.வினரால் முடிவு செய்ய முடியவில்லை. அவர்களுக்கு சின்னம் கிடைக்குமா?, கிடைக்காதா?, யார் போட்டியிடுவார் என்ற குழப்பமான சூழல் உள்ளது.

பா.ஜ.க போட்டியிடுமா? என்ற குழப்பமும் உள்ளது. இவையெல்லாம் எங்களுக்கு சாதகமாக உள்ளதால் மிகப்பெரிய வாக்குகள் வித்தியாசத்தில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மகத்தான வெற்றியை பெறுவார். அ.தி.மு.க.வுக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்குமா? என்பதை மோடி, அமித் ஷா தான் முடிவு செய்வார்கள். காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவராக நான் மீண்டும் வருவேனா என என்னால் கூற முடியாது. கட்சி தலைமை யாரை தலைவராக அறிவிக்கிறதோ நாங்கள் அவருடன் இணைந்து செயல்படுவோம். ராகுல் காந்தியின் பாதயாத்திரையால் காங்கிரஸ் பலம் பெற்றிருக்கிறது என்றார் திருநாவுக்கரசர் எம்பி.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!