ஈரோடு மாவட்டத்தில் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டிற்கு தடை

ஈரோடு மாவட்டத்தில் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டிற்கு தடை
X

பைல் படம்.

ஈரோடு மாவட்டத்தில் நாளை மகாளய அமாவாசை முன்னிட்டு வழிபாட்டுத்தலங்கள் மற்றும் ஆறுகளில் நீராடுவதற்கு தடை.

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் கோவில்கள், ஆலயங்கள் மற்றும் மசூதிகள் ஆகியவை வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 06.10.2021 புதன் கிழமை நாளை மகாளய அமாவாசை நாளினை முன்னிட்டு கீழ்க்காணும் திருக்கோவில்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய பொதுமக்கள் அதிகளவில் கூடுவார்கள் என்பதால் வழிபாட்டுத்தலங்கள், அணைக்கட்டுகள் மற்றும் ஆறுகளில் நீராடுவதற்கு தடை விதிக்கப்படுகிறது.

1. அருள்மிகு பண்ணாரி அம்மன் கோவில், பண்ணாரி

2. அருள்மிகு சங்கமேஸ்வரர் திருக்கோவில், பவானி

3. அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோவில், சென்னிமலை.

4. அருள்மிகு பெரியமாரியம்மன் கோவில், ஈரோடு.

5. அருள்மிகு மகுடேஸ்வரர்கோவில் படித்துறை, கொடுமுடி

6. அருள்மிகு கொண்டத்துக்காளியம்மன் திருக்கோவில், பாரியூர்

7. அருள்மிகு வேலாயுதசாமி திருக்கோவில், திண்டல்

8. அருள்மிகு ஆருத்ரா கபாளீஸ்வரர் திருக்கோவில், ஈரோடு.

9. அருள்மிகு கொங்காலம்மன் திருக்கோவில், ஈரோடு.

10. அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோவில், பச்சைமலை, கோபி வட்டம்

11. அருள்மிகு தம்பிக்கலை ஐய்யன்சுவாமி திருக்கோவில், தங்கமேடு, பெருந்துறை வட்டம்

12. அருள்மிகு தாந்தோன்றியம்மன் திருக்கோவில், மொடச்சூர்

13. அருள்மிகு செல்லீஸ்வரர் வகையறா திருக்கோவில், அந்தியூர்

14. அருள்மிகு சாரதா மாரியம்மன் திருக்கோவில், கோபிசெட்டிபாளையம்

15. அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில், வீரப்பன் சத்திரம்

16. அருள்மிகு பத்ரகாளியம்மன் திருக்கோவில், கள்ளுக்கடைமேடு, ஈரோடு

17. அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில், சூரம்பட்டி வலசு, ஈரோடு வட்டம்

18. அருள்மிகு சீதேவியம்மன் திருக்கோவில், காஞ்சிக்கோவில்.

19. அருள்மிகு சின்னமாரியம்மன் திருக்கோவில், கருங்கல்பாளையம், ஈரோடு.

20. அருள்மிகு செல்லாண்டியம்மன் திருக்கோவில், பெருந்துறை.

21. அருள்மிகு பொன்காளியம்மன் திருக்கோவில், தலையநல்லூர், சிவகிரி

22. அருள்மிகு வேணுகோபால சுவாமி திருக்கோவில், சத்தியமங்கலம்

23. அருள்மிகு நட்டாத்தீஸ்வரர் கோவில், காங்கேயம்பாளையம்

24. அருள்மிகு மத்யபுரீஸ்வரர் கல்யாண வரதராஜப்பெருமாள் திருக்கோயில், நஞ்சை

காளமங்கலம். காலிங்கராயன் அணைக்கட்டு, சித்தோடு

25. காரனம்பாளையம் அணைக்கட்டு, மலயம்பாளையம்

26. கொடிவேரி அணைக்கட்டு, கடத்தூர்

27. பவானிசாகர் அணை, பவானிசாகர்.

கொரோனா மூன்றாம் அலை பரவலை தடுக்கும் பொருட்டு பொதுமக்கள் அனைவரும்மாவட்ட நிர்வாகத்தின் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என ஈரோடு மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!