ஈரோடு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரெய்டு

ஈரோடு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரெய்டு
X

சோதனை நடைபெற்ற, ஈரோடு, சோலார் பகுதியில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகம்.

ஈரோடு சோலார் அருகே உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.

ஈரோடு, கரூர் சாலையில், சோலார் பகுதியில் கிழக்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் உள்ளது. இங்கு வாகன ஆய்வாளராக கதிர்வேலும், வட்டார போக்குவரத்து அலுவலராக பிரதிபாவும் பணியாற்றி வருகிறார்கள். இந்த அலுவலகத்தின் மேல்மாடியில், துணை போக்குவரத்து அலுவலகம் உள்ளது. இதில்,டி.டி.சி. ஆக ரவிச்சந்திரன் உள்ளார்.

இங்கு லஞ்சம் உள்ளிட்ட முறைகேடு நடப்பதாக, குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த சூழலில், பெண் டிஸ்பி தலைமையில் லஞ்ச ஒழிப்பு போலீசார், இன்று திடீர் சோதனை மேற்கொண்டனர்.

பள்ளிபாளையமும் தப்பவில்லை

இதேபோல், நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் உள்ள ஆர்.டி.ஓ. அலுவலகத்திலும், லஞ்ச ஒழிப்பு போலீஸ் ஆய்வாளர் நல்லம்மா தலைமையில், சோதனை நடைபெற்று வருகிறது. இந்த அலுவலகத்தில், சத்யா என்பவர் ஆய்வாளராக உள்ளார்.

இதுமட்டுமின்றி, தமிழகத்தின் பல்வேறு ஆர்.டி.ஓ. அலுவலகங்களிலும், போக்குவரத்து சோதனைச்சாவடிகளிலும், லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனைகளை நடத்தி வருவதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!