ஈரோடு மாவட்டத்தில் ஆதார் சிறப்பு முகாம்
பைல் படம்.
இதுகுறித்து ஈரோடு அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
ஈரோடு மாவட்ட மக்கள் அனைவரும் ஆதார் சேவையை எளிதில் பெறும் வகையில் ஈரோடு அஞ்சல் ஆதார் கோட்டம் சார்பில் பல்வேறு இடங்களில் ஆதார் சிறப்பு சேவை முகாம் நடத்தி வருகிறது. அதன்படி, தாமரைகரை அரசு உயர்நிலைப் பள்ளியில் தேதி வரும் 11ம் தேதி முதல் 13ம் தேதி வரை மூன்று நாள் ஆதார் நாட்கள் நடைபெற உள்ளது.
இதேபோல், 12 மற்றும் 13ம் தேதி ஆகிய இரு நாட்களில் பவானி அருகே வாசவி கல்லூரி, கஸ்பாபேட்டை பஞ்சாயத்து அலுவலகம், கல்கடம்பூர் ஊராட்சி ஒன்றிய நடுலைப்பள்ளிகளில் சிறப்பு சேவை முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமானது காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும். இதில், புதிய ஆதார் அட்டை எடுப்பவர்களுக்கு கட்டணமின்றி இலவசமாக எடுத்து தரப்படுகிறது. ஏற்கனவே உள்ள ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்ததேதி, செல்போன் எண், மின்னஞ்சல், பாலினம் உள்ளிட்டவை திருத்தம் செய்ய அல்லது மாற்றுவதற்கு ரூ.50 கட்டணம் வசூலிக்கப்படும்.
திருத்தங்களுடன் பயோமெட்ரிக் பதிவுக்கு 100 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும். பெயர் மற்றும் முகவரி மாற்றம் செய்ய தேவையான ஆவணங்களுடன் ரேஷன் கார்டு, தபால் நிலைய அடையாள அட்டை, வங்கி கணக்கு புத்தகம், ஆயுள் காப்பீடு சான்றிதழ், திருமண சான்றிதழ், பாஸ்போர்ட், பான் கார்டு, மதிப்பெண் சான்றிதழ், கல்வி நிறுவனம் வழங்கிய அடையாள அட்டை என ஏதாவது ஒன்றை கொண்டு வரவேண்டும். செல்போன் எண், மின்னஞ்சல் மாற்றம் செய்ய அடையாள அட்டை தேவை இல்லை. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu