/* */

ஈரோடு ரயில் நிலையத்தில் 9 கிலோ கஞ்சா பறிமுதல்

ஈரோடு ரெயில் நிலையத்தில் 9 கிலோ கஞ்சா பறிமுதல்

HIGHLIGHTS

ஈரோடு ரயில் நிலையத்தில் 9 கிலோ கஞ்சா பறிமுதல்
X

பறிமுதல் செய்யப்பட கஞ்சாவுடன் ரயில்வே காவலர்கள்.

ஜாா்க்கண்ட் மாநிலம் தன்பாத்தில் இருந்து கேரள மாநிலம் ஆலப்புழாவுக்கு சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் ஈரோடு ரயில் நிலையத்துக்கு நேற்று வந்தது. அந்த ரயிலில் ரயில்வே பாதுகாப்பு படை குற்றப்புலனாய்வு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் தலைமையிலான போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த ரயில் பெட்டியில் கேட்பாரற்று ஒரு பை கிடந்தது. அந்த பையை எடுத்து போலீசார் சோதனையிட்டனர். அப்போது அதில் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து 9 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் ஆந்திர மாநிலத்திலிருந்து கஞ்சா கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. கஞ்சாவை கடத்தியவர்கள் யார் என்று போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவை கோவை மாவட்ட போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸாரிடம் ரயில்வே பாதுகாப்பு படையினர் ஒப்படைத்தனா்.

Updated On: 2 Nov 2021 10:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பாலாடைக்கட்டி (சீஸ்) தினமும் சாப்பிடலாமா?
  2. லைஃப்ஸ்டைல்
    காரசாரமான பூண்டு மிளகாய் சட்னி செய்வது எப்படி?
  3. லைஃப்ஸ்டைல்
    சுவையான ஐஸ்கிரீம் வீட்டிலேயே செய்வது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சிவனை தஞ்சமடைந்தால் வாழ்க்கை ஒளிபெறும்..!
  5. லைஃப்ஸ்டைல்
    சிலருக்கு வரம்; பலருக்கு சாபமாகும் தனிமை..!
  6. குமாரபாளையம்
    குமாரபாளைத்தில் மழை வேண்டி சிறப்பு யாகம்!
  7. லைஃப்ஸ்டைல்
    உழைப்பில் எறும்பை போல இரு..! உயர்வு தேடி வரும்..!
  8. கோவை மாநகர்
    காவசாகி என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை காப்பாற்றிய அரசு...
  9. லைஃப்ஸ்டைல்
    உலக இயக்கம்கூட உன்னால்தான், பெண்ணே..!
  10. திருப்பரங்குன்றம்
    மதுரை விமான நிலையத்தில், பல லட்சம் பெறுமான தங்கம் மீட்பு