ஈரோடு மாவட்டத்தில் இன்று 5வது கட்டமாக 72 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்கும் வகையில் சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே கடந்த மாதம் 12, 19 மற்றும் 26-ந் தேதிகளில் 3 கட்டமாக மாபெரும் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.இம்மாதம் 3-ம் தேதி 4வது கட்டமாக தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
இந்த நிலையில் இன்று 5-வது கட்டமாக தமிழகம் முழுவதும் மாபெரும் தடுப்பூசி முகாம் நடந்தது. அதன்படி ஈரோடு மாவட்டத்திலும் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் இன்று நடந்தது. ஈரோடு மாநகராட்சி பகுதியில் 101 இடங்களிலும், மாவட்டம் முழுவதும் 993 இடங்களிலும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
இந்த முகாம்களில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆர்வமுடன் வந்து முதல் தவணை மற்றும் 2-ம் தவணை கோவிஷீல்டு, கோவேக்சின் தடுப்பூசியினை செலுத்திக்கொண்டனா். ஈரோடு மாவட்டம் முழுவதும் 72 ஆயிரத்து 581 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.. இதில் முதல் தவணை தடுப்பூசி 34 ஆயிரத்து 321 பேரும், இரண்டாவது தவணை தடுப்பூசி 38 ஆயிரத்து 260 பேருக்கும் போடப்பட்டுள்ளது.
தடுப்பூசி போடும் பணியில் சுகாதார பணியாளர்கள், செவிலியர்கள், தன்னார்வலர்கள், கல்லூரி மாணவர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu