போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 4,786 வழக்கு பதிவு: ரூ.3 லட்சம் அபராதம்

போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 4,786 வழக்கு பதிவு: ரூ.3 லட்சம் அபராதம்
X

பைல் படம்.

செப்டம்பர் மாதத்தில் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 4,786 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.3 லட்சம் அபராதம் வசூல்.

ஈரோடு மாநகர் பகுதியில் கடந்த செப்டம்பர் மாதம் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக தெற்கு போக்குவரத்து போலீசாரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதன்படி செல்போன் பேசியபடி வாகனங்களை இயக்கியதாக 123 வழக்குகள், ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிளில் சென்றதாக 1,926 வழக்குகள், ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து சென்றதாக 1,626 வழக்குகள் என கடந்த மாதத்தில் மட்டும் 4,786 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதன் மூலம் 3 லட்சத்து 2,500 அபாரதம் வசூலிக்கப்பட்டதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!