குடுகுடுப்பு வேடமணிந்து வாக்கு சேகரிப்பு : ஈரோடு இடைத்தேர்தலில் ருசிகரம்..!

குடுகுடுப்பு வேடமணிந்து வாக்கு சேகரிப்பு : ஈரோடு இடைத்தேர்தலில் ருசிகரம்..!
X

குடுகுடுப்பு வேடமணிந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டதை படத்தில் காணலாம்.

ஈரோடு மாவட்டம், கருங்கல்பாளையம் பகுதியில் உள்ள சின்ன மாரியம்மன் திருக்கோயில் வளாகத்தில் திமுக கூட்டணி கட்சி வேட்பாளரை ஆதரித்து வித்தியாசமான முறையில் குடுகுடுப்பு வேடமணிந்து பொதுமக்களிடம் வாக்குகளை சேகரித்தனர்.

ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையம் பகுதியில் உள்ள சின்ன மாரியம்மன் திருக்கோயில் வளாகத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளரை ஆதரித்து வித்தியாசமான முறையில் குடுகுடுப்பு வேடமணிந்து பொதுமக்களிடம் வாக்குகளை சேகரித்தனர்.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் வருகின்ற பிப்ரவரி மாதம் 27-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், இந்த தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழக தலைமையிலான கூட்டணியும், அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தலைமையிலான கூட்டணியும், நாம் தமிழர், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இடைத்தேர்தல் களத்தில் உள்ளனர்.

வரும் பிப்ரவரி மாதம் 27-ம் தேதி நடைபெற உள்ளது இதற்கான பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக திமுக கூட்டணி கட்சி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து வேலூர் மாவட்ட செயலாளர் அணைக்கட்டு பகுதி சட்டமன்ற உறுப்பினருமான நந்தகுமார் தலைமையில், சேலம் கோவிந்தன் தலைமை கழக பேச்சாளர் வித்தியாசமான முறையில் குடுகுடுப்பு வேடமணிந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.

இவர் குடுகுடுப்பை வேடத்துடன் அதிகாலை 4 மணி முதல் கைச்சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்து வருகின்றார். இந்த நிகழ்வின் போது திண்டுக்கல் மாவட்ட செயலாளர் ராஜாமணி மற்றும் திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியைச் சார்ந்த நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் தொண்டர்கள் என ஏராளமானோர் கைச்சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தனர்.

ஈரோடு கிழக்குத்தொகுதி இடைத்தேர்தலில் இவ்வாறு குடுகுடுப்பை வேடமணிந்து வாக்கு சேகரித்தது புதுமையாகவும், ரசிக்கும்படியாகவும் இருந்தது. மக்கள் அதை ஆர்வமுடன் வேடிக்கைப்பார்த்தனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!