ஈரோடு இடைத்தேர்தல்; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் வேட்புமனு தாக்கல்
கோப்பு படம்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலையொட்டி, இன்று (31ம் தேதி) வேட்பு மனுதாக்கல் தொடங்கியது. முதல் நாளான இன்று வேட்புமனுத் தாக்கல் செய்ய 11 சுயேச்சைகள் வருகைதந்த நிலையில், 7 பேரின் வேட்புமனுவில் திருத்தம் இருந்ததால், 4 பேர் மட்டுமே முதல் நாளில் தாக்கல் செய்தனர். அதன்படி, ராஜேந்திரன் (61). தமிழக அரசு போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுனராக பணிபுரிந்து பணி ஓய்வு பெற்றவர். திருச்சியைச் சேர்ந்த இவர், வேட்புமனு தாக்கல் செய்வதற்கான டெபாசிட் தொகைக்கு ரூபாய் பத்தாயிரம் ரூபாய்க்கான பத்து ரூபாய் நாணயங்களை கொண்டு வந்திருந்தார். இதுகுறித்து அவர் கூறும் போது ரிசர்வ் வங்கி 10 ஆயிரம் ரூபாய் நாணயம் செல்லும் என்று அறிவித்த போதும் பல இடங்களில் 10 ரூபாய் நாணயங்களை வாங்குவதில்லை. இதுகுறித்து எவ்வித உத்தரவும் வரவில்லை. இதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துவதற்காக தற்போது நான் தேர்தலில் நிற்பதாகவும், மேலும் நான்காவது முறையாக தேர்தலில் நிற்பதாகவும் கூறியுள்ளார்.
அதே போல், நூர் முகமது வயது (63). இவர் கோவையை சேர்ந்தவர். இவர் மக்களுக்கு செருப்பாக உழைப்பேன் என்று கூறி செருப்பு மாலை அணிந்த வண்ணத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தனர். மாரியப்பன் வயது (51), இவர் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியை சேர்ந்தவர். அகில இந்திய தேசிய காங்கிரஸ் மாநில அமைப்பாளராக உள்ள இவர். இவரது மனைவி இளையராணி (45), மகள் சத்யா (24 ) ஆகிய மூன்று பேரும் வேட்பு மனுதாக்கல் செய்தனர். நீர்வள ஆதாரங்கள் பாதுகாப்பு மற்றும் மக்கள் பொதுநல அறக் கட்டளையின் நிறுவனத் தலைவர் எம்.பி. சங்கர பாண்டியன் வேட்பு மனு தாக்கல் செய்தார். கடந்த 20 வருடமாக சமூக சேவையை மதுரை மாநகராட்சி பகுதியில் செய்து வருவதாகவும், 2021 சட்டமன்ற தேர்தலில் மதுரை வடக்கு தொகுதியிலும், 2022 மதுரை மாநகராட்சி தேர்தலிலும் போட்டியிட்டு உள்ளார்.
மேலும், நீர்நிலை பாதுகாப்பு மற்றும் மது போதைக்கு எதிரான விழிப்புணர்வு, மக்கள் பிரச்சனைக்கு குரல் கொடுப்பது என இவர் தேர்தல் வாக்குறுதி கொடுத்துள்ளார். இவரும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். நாமக்கல் சேர்ந்த யோகா ஆசிரியர் ரமேஷ் (42) இவர் காந்திய உணர்வாளர் இவரும் தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். பின்னோக்கி நடந்து சென்று வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த ஜோலார்பேட்டையை சேர்ந்த மனிதன் என்ற நபர்; டெபாசிட் செலுத்தக்கூடிய ₹10,000ஐ டிடியாக எடுத்து வந்ததாலும், வேட்பாளராக 10 பேர் முன்மொழிய கையொப்பம் இல்லாமல் வந்ததாலும் அவரை திருப்பி அனுப்பப்பட்டார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu