/* */

ஈரோடு இடைத்தேர்தல் அதிகாரிகளை மாற்ற வேண்டும்; கே.பி.ராமலிங்கம்

ஈரோடு வருவாய்த்துறை காவல்துறை அதிகாரிகளை மாற்ற வேண்டும் என பாஜக மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் கூறியுள்ளார்.

HIGHLIGHTS

ஈரோடு இடைத்தேர்தல் அதிகாரிகளை மாற்ற வேண்டும்; கே.பி.ராமலிங்கம்
X

கே.பி.ராமலிங்கம்.

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டசபை இடைத்தேர்தல் பிப்., 27ம் தேதி நடைபெறுகிறது. தி.மு.க., சார்பில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். தேர்தலையொட்டி இன்று (31ம் தேதி) முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கி உள்ளது. காலை 10 மணி தொடங்கி பிற்பகல் 3 மணி வரை தாக்கல் செய்யலாம். வேட்பு மனு தாக்கல் செய்ய பிப்ரவரி மாதம் 7-ந்தேதி கடைசி நாளாகும். 8-ந்தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை நடைபெறும். வேட்பு மனுக்களை திரும்ப பெற பிப்ரவரி மாதம் 10-ந்தேதி கடைசி நாள் ஆகும்.

இந்த நிலையில், பாஜக மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம், செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, அண்ணாமலை சார்பில் பா.ஜ., நிர்வாகிகள் ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் முறையாக நடைபெறாது என்பதற்கான ஆதாரங்களை, தேர்தல் அதிகாரியிடம் அளித்துள்ளோம். அமைச்சர்களின் ஆடியோ, வீடியோ ஆதாரங்களை அளித்துள்ளோம். அதன் மீதான நடவடிக்கையை எதிர்பார்க்கிறோம். முறையான தேர்தல் நடைபெறுவதற்காக வருவாய்த்துறை, காவல்துறை அதிகாரிகளை மாற்ற வேண்டும்.

வேட்பாளரை தகுதி நீக்கம் செய்வதற்கான அளவிற்கு ஆதாரங்கள் உள்ளது. மத்திய பாதுகாப்பு படையினரைக் கொண்டு தேர்தலை நடத்த வேண்டும். ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் தொடர்பாக இன்று (31ம் தேதி) மாலை பாஜக மாநில நிர்வாகிகள் கூட்டம் நடைபெறுகிறது. கூட்ட முடிவை தேசிய தலைமைக்கு அனுப்புவோம் என்றார்.

Updated On: 31 Jan 2023 10:45 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை வனப்பகுதிகளில் தண்ணீர் தொட்டிகள் அமைப்பு
  5. ஆரணி
    புகையிலை பொருட்கள் பறிமுதல்; மூன்று பேர் கைது
  6. செங்கம்
    செங்கம் அருகேயுள்ள கிராம மக்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் குடிநீா்...
  7. செய்யாறு
    கிராம விவசாயிகளுக்கு மண்புழு உரம் தயாரித்தல் செயல்விளக்கம்
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஓ ஆர் எஸ் கரைசல்...
  9. திருவண்ணாமலை
    வேளாண் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடிய மாவட்ட கலெக்டர்
  10. ஈரோடு
    அந்தியூர் அருகே மாநில எல்லையில் 2 பேரிடம் ரூ.1.50 லட்சம் பறிமுதல்