ஈரோடு இடைத்தேர்தல்: அதிமுக வேட்பாளர் தென்னரசு தீவிர பிரசாரம்

ஈரோடு இடைத்தேர்தல்: அதிமுக வேட்பாளர் தென்னரசு தீவிர பிரசாரம்
X

ஈரோடு மணல்மேடு பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அதிமுக வேட்பாளர் தென்னரசு.

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு மணல்மேடு பகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கே.எஸ். தென்னரசு தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு மணல்மேடு பகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கே.எஸ். தென்னரசு தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.

ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் வருகிற 27-ம் தேதி நடைபெறுகிறது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக 20 அமைச்சர்கள், எம்எல்ஏக்கள். மாவட்ட செயலாளர்கள் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

அதிமுக சார்பில் கே. எஸ். தென்னரசு போட்டியிடுகிறார். முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, கருப்பண்ணன், கே.வி. ராமலிங்கம், நத்தம் விஸ்வநாதன் ஆர்.பி உதயகுமார், செல்லூர் ராஜு, ராஜேந்திர ர பாலாஜி, விஜயபாஸ்கர் என 30-க்கும் மேற்பட்ட முன்னாள் அமைச்சர்கள் ஈரோட்டில் முகாமிட்டு பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வாக்காளர்களை கவரும் வகையில் அவர்கள் வித்தியாசமான முறையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று காலை அதிமுக வேட்பா ளர் கே .எஸ். தென்னரசு மணல்மேடு பகுதி முழுவதும் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவருடன் முன்னாள் அமைச்சர்கள் செம்மலை, கே.வி.ராமலிங்கம், தமிழ் மாநில காங்கிரஸ் பொதுச் செயலாளர் விடியல் சேகர் ஆகியோரும் வீடு, வீடாக சென்று இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர். பொதுமக்களை கவரும் வகையில் எம்ஜிஆர் வேடத்துடன் நிர்வாகிகள் சிலரும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

Tags

Next Story
ஏஐ ஆல் மனிதர்களுக்கு ஆபத்தா? உண்மை என்ன?