ஈரோடு புத்தகத் திருவிழா: வரும் 5ம் தேதி காணொளி மூலம் முதல்வர் துவக்கி வைப்பு

ஈரோடு புத்தகத் திருவிழா: வரும் 5ம் தேதி காணொளி மூலம் முதல்வர்  துவக்கி வைப்பு
X

இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் எடுத்த படம்.

ஈரோடு புத்தகத் திருவிழாவை முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் ஆகஸ்ட் 5ம் தேதி மாலை 5 மணிக்கு சென்னையில் இருந்து காணொளி காட்சி மூலமாக துவக்கி வைக்கிறார்.

மக்கள் சிந்தனைப் பேரவை சார்பில், ஆகஸ்ட் 5ம் தேதி ஈரோட்டில் புத்தகத் திருவிழா 2022 மற்றும் கண்காட்சியை முதல்வர் துவக்கி வைப்பதாக இருந்தது.

இந்நிலையில், சில காரணங்களால் அவர் வர இயலாததால், சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் அவர் புத்தகத் திருவிழாவை துவக்கி வைக்கிறார். வரும் ஆகஸ்ட் 5ம் தேதி முதல் 16ம் தேதி வரை ஈரோடு சிக்கய்யநாயக்கர் கல்லூரி மைதானத்தில் நடைபெறும் புத்தகத் திருவிழா 230-க்கும் மேற்பட்ட அரங்குகள் உடன் நடைபெறுவதாக இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் மக்கள் சிந்தனைப் பேரவை மாநில தலைவர் ஸ்டாலின் குணசேகரன் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
ai future project