ஈரோடு: தேர்தலுக்கு முன் அனைத்து வேட்பாளர்களும் விதிமுறைகளை பின்பற்ற அறிவுரை

ஈரோடு: தேர்தலுக்கு முன் அனைத்து வேட்பாளர்களும் விதிமுறைகளை பின்பற்ற அறிவுரை
X

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தேர்தலுக்கு முன்பாக வேட்பாளர்கள் பின்பற்ற வேண்டிய தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்த கூட்டம் ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலரும் ஆட்சியருமான ராஜ கோபால் சுன்கரா தலைமையில் நடைபெற்றது.

தேர்தலுக்கு முன்பாக பின்பற்ற வேண்டிய தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான ராஜ கோபால் சுன்கரா வேட்பாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

தேர்தலுக்கு முன்பாக பின்பற்ற வேண்டிய தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான ராஜ கோபால் சுன்கரா வேட்பாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தல் 2024ஐ முன்னிட்டு அனைத்து வேட்பாளர்களும் தேர்தல் நடைபெறும் 72 மணி நேரம் மற்றும் 48 மணி நேரத்திற்கு முன்பிலிருந்து பின்பற்ற வேண்டிய தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்த கூட்டம் ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான ராஜ கோபால் சுன்கரா தலைமையில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.


இக்கூட்டத்தில் மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான ராஜ கோபால் சுன்கரா தெரிவித்ததாவது,

72 மணி நேரத்திற்கு முன்பாக...

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் தினத்திற்கு 72 மணி நேரத்திற்கு முன்பிலிருந்து மாநில மற்றும் மாவட்ட எல்லைகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும். குறிப்பாக ரூ.50 ஆயிரம் மேற்பட்ட பணம், மதுபானங்கள் மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் உரிய ஆவணமின்றி கொண்டு செல்லுதல், ஊடகங்கள் மூலம் தவறான செய்திகள் ஒலி மற்றும் ஒளிபரப்புதல் ஆகியவை தடைசெய்யப்படுகிறது. மேலும், பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்பு குழுக்களின் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும்.

48 மணி நேரத்திற்கு முன்பாக...

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் தினத்திற்கு 48 மணி நேரத்திற்கு முன்பிலிருந்து ஒலிபெருக்கிகள் தடை செய்யப்படுகிறது. மேலும், அனைத்து தேர்தல் பிரச்சாரங்கள் நடத்துதல், தொகுதிக்குள் வாக்காளர் அல்லாத பிற நபர்களின் நடமாட்டம், தங்கும் விடுதிகள் மற்றும் சமுதாயக் கூடங்களில் பிற நபர்கள் தங்குவது மற்றும் கூட்டங்கள் கூடுவது, அதிக எண்ணிக்கையிலான குறுஞ்செய்திகள் அனுப்புவது, ரூ.50 ஆயிரத்துக்கு மேல் உரிய ஆவணமின்றி கொண்டு செல்லுதல் ஆகியவற்றிற்கு தடை விதிக்கப்படுகிறது.

மேலும், தேர்தல் தொடர்பான பொது கூட்டங்கள், ஊர்வலங்கள் போன்றவைகளை நடத்துதல் கூடாது. தொலைக்காட்சி, திரைப்படம், சமூக வலைதளங்கள் மூலமாக தேர்தல் தொடர்பான விவரங்களை எவ்விதத்திலும் காட்சிப்படுத்துதல், விளம்பரப்படுத்துதல், பொதுமக்களை கவரும் வகையிலான மேடை நாடகங்கள், கச்சேரிகள், கலைநிகழ்ச்சிகள் போன்றவைகளை நடத்துதல் கூடாது. மேலும், கட்சி பணிகளுக்காக வெளி மாவட்டம், பிற தொகுதிகளிலிருந்து வந்துள்ள கட்சித் தொண்டர்கள், கட்சிப் பணியாளர்கள் எவரும் இருக்கக் கூடாது.

சம்பந்தமில்லாமல் வெளி மாவட்டங்களிலிருந்து வந்து தங்கியிருக்கும் நபர்கள் குறித்து மாவட்ட நிர்வாகமும், காவல் துறையும் திருமண மண்டபங்கள், தங்கும் விடுதிகள், விருந்தினர் மாளிகைகள் ஆகியவற்றினை தணிக்கை செய்ய வேண்டும். தங்கும் விடுதி, உணவகங்கள் ஆகியவற்றில் பதிவுகள் ஏதும் இல்லாமல் தங்குவதற்கு அனுமதியளிக்கக் கூடாது என்பது குறித்தும் உரிய பதிவேடுகளை கட்டாயம் பராமரிக்கப்பட வேண்டும் என்பது குறித்தும் சம்பந்தப்பட்ட உரிமையாளர்களுக்கு அறிவுரைகள் வழங்க வேண்டும்.

தேர்தல் நாளான்று:-

நாடாளுமன்றத் தொகுதி எல்லைகளில் உரிய சோதனை சாவடிகள் அமைத்து வெளிநபர்கள் எவரும் ஊடுருவா வண்ணம் வாகனத் தணிக்கை செய்யப்பட வேண்டும். வெளியூர்களிலிருந்து கூட்டமாக வரும் நபர்களை அவர்களது அடையாள அட்டையினை பரிசீலித்து தொகுதியின் வாக்காளர்கள் தானா? என்பதை உறுதி செய்த பின்னர் அனுமதிக்கப்பட வேண்டும். மேலும் வாக்குப்பதிவு நாளன்று வாக்குச்சாவடி அமைவிடத்திற்கு 200 மீட்டருக்கு அப்பால் அரசியல் கட்சியினர் தற்காலிக பூத் அமைப்பது குறித்தும், அதில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்தும், வேட்பாளர்கள் வாகனங்களுக்கு அனுமதி பெறுவது குறித்தும் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.

வீதிமிறல் புகார் எண்கள் :-

மேற்குறிப்பிட்ட தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை அரசியல் கட்சியினர் மற்றும் வேட்பாளர்கள் தவறாது கடைபிடிக்க வேண்டும் எனவும், பொதுமக்கள் வேவையான ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவற்றில் விதிமீறல் ஏதேனும் காணப்படின், இது குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்பட்டு வரும் தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 425 0424 என்ற எண்ணிற்கும், தொலைபேசி எண்கள் 0424 2267672, 2267674,2267675, 2267679 ஆகியவற்றிற்கும் புகார் தெரிவிக்கலாம் எனவும், சிவிஜில் என்ற செல்போன் செயலி மூலம் புகார் அளிக்கலாம் எனத் தெரிவித்தார்.

முன்னதாக, ஈரோடு மாவட்ட ஆட்சியரக கூடுதல் கட்டிடம் முதல் தளம் கூட்டரங்கில் நாடாளுமன்றத் தேர்தல், 2024ஐ முன்னிட்டு தேர்தல் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட உள்ள காவல்துறை பணியாளர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கான அஞ்சல் வாக்களிப்பு மையத்தில் வாக்குகள் செலுத்துவதை மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான ராஜ கோபால் சுன்கரா நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

இக்கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவஹர், மாவட்ட வருவாய் அலுவலர் சாந்த குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) ரகுநாதன், வட்டாட்சியர் (தேர்தல்) சிவசங்கர் மற்றும் ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள், வேட்பாளர்களின் முகவர்கள் உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!