ஈரோடு: ஆப்பக்கூடல் அருகே வீடு புகுந்து திருடிய இளைஞருக்கு 2 ஆண்டு சிறை

ஈரோடு: ஆப்பக்கூடல் அருகே வீடு புகுந்து திருடிய இளைஞருக்கு 2 ஆண்டு சிறை
X

சங்கர்.

ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் அருகே வீடு புகுந்து திருடிய வாலிபருக்கு இரண்டாண்டு சிறை தண்டனை விதித்து பவானி நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆப்பக்கூடல் அருகே வீடு புகுந்து திருடிய வாலிபருக்கு இரண்டாண்டு சிறை தண்டனை விதித்து பவானி நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள ஆப்பக்கூடல் சிந்தகவுண்டன்பாளையத்தைச் சேர்ந்தவர் பழனிசாமி (வயது 32). இவருடைய வீடு புகுந்து நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தட்டன்குட்டைய சேர்ந்த சங்கர் (வயது 34) என்பவர் ஒரு பவுன் தங்க காசு, ரூ.2 ஆயிரத்தை கடந்த 2022ம் பிப்ரவரி மாதம் 24ம் தேதி திருடினார். இதுகுறித்து ஆப்பக்கூடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து சங்கரை கைது செய்தனர்.

இதுதொடர்பான வழக்கு பவானி குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், இவ்வழக்கை விசாரித்த நீதிபதி, வீடு புகுந்து திருடிய சங்கருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1,000 அபராதமும், அபராதத்தை கட்ட தவறினால், மேலும் 3 மாதம் கூடுதலாக சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்ப்பு கூறினார். இதைத்தொடர்ந்து கோபியில் உள்ள மாவட்ட கிளை சிறையில் சங்கர் அடைக்கப்பட்டார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!