ஈரோடு: மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 163 மனுக்கள்

ஈரோடு: மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 163 மனுக்கள்
X

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சந்தோஷினி சந்திரா பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று குறைகளை கேட்டறிந்தார்.

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சந்தோஷினி சந்திரா பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று குறைகளை கேட்டறிந்தார்.

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சந்தோஷினி சந்திரா பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று குறைகளை கேட்டறிந்தார். மேலும், இதில், கூட்டத்தில் முதியோர், விதவை, மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட உதவித் தொகைகள் கேட்டும், வீட்டுமனைப் பட்டா உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்த கோரிக்கைகளை 163 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டன.

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுவது வழக்கம். அப்போது, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, அம்மனுக்கள் மீதான சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்கி தீர்வு காணப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் இன்று (12.12.2022) மாவட்ட வருவாய் அலுவலர் ச.சந்தோஷினி சந்திரா தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

இக்குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கணவனால் கைவிடப்பட்டோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, வீட்டுமனைப்பட்டா, வேலைவாய்ப்பு, காவல்துறை நடவடிக்கை, புதிய குடும்ப அட்டை, கல்விக்கடன், தொழில் கடன், குடிநீர் வசதி, சாலை வசதி, அடிப்படை வசதிகள் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 163 மனுக்கள் வரப்பெற்றன. பொதுமக்கள் அளித்த பல்வேறு கோரிக்கை மனுக்களை மாவட்ட வருவாய் அலுவலர் பெற்றுக்கொண்டு பரிசீலித்து சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது உடனடி நடவடிக்கை எடுத்திட உத்தரவிட்டார்.

இக்குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் முதலமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள், அமைச்சர் பெருமக்களின் முகாம் மனுக்கள், மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள், மாவட்ட கலெக்டர் மனுநீதி நாள் முகாம் மனுக்கள், மாவட்ட உயர் அலுவலர்களின் மனுநீதி நாள் முகாம் மனுக்கள், மக்களைத் தேடி வருவாய்த்துறை அம்மா திட்ட மக்கள் குறை தீர்க்கும் முகாமில் பெறப்பட்ட மனுக்கள் ஆகியவற்றின் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு மேற்கொண்டார்

மேலும், பொதுமக்கள் அளித்த பல்வேறு கோரிக்கை மனுக்களை மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் பெற்று உரிய துறை அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது உடனடி நடவடிக்கை எடுத்திட உத்தரவிட்டார். மேலும், மாண்புமிகு முதலமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள், மாண்புமிகு அமைச்சர் பெருமக்களின் முகாம் மனுக்கள், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். இக்கூட்டத்தில் தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) குமரன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் ரங்கநாதன் உட்பட அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai in future agriculture