கூகலுார் கிளை வாய்க்காலில் ஆகாயத்தாமரை ஆக்கிரமிப்பு

கோபி அருகே உள்ள கூகலூர் கிளை வாய்க்காலில் ஆகாயத்தாமரை செடிகள் அதிகளவில் ஆக்கிரமித்துள்ளதால் பாசன விவசாய நிலங்களுக்கு சீரான தண்ணீர் செல்வதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது, பவானிசாகர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் கோபி அருகே கொடிவேரி தடுப்பணையில் தடுத்து தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசனமாக 24,504 ஏக்கர் நிலங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது, 78 கிலோமீட்டர் நீளமுள்ள தடப்பள்ளி வாய்க்காலின் 36வது கிலோமீட்டரில் பாரியூர் அருகே உருளை என்ற இடத்தில் கூகலூர் கிளை வாய்க்கால் பிரிகிறது, 21 கிலோமீட்டர் நீளமுள்ள இந்த கூகலூர் வாய்க்கால் மூலம் 3,200 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெற்று வருகின்றன, கடந்த 2024 டிசம்பர் 11 முதல் வரும் ஏப்ரல் 9 வரை 120 நாட்களுக்கு இரண்டாம் போக பாசனத்திற்காக திறக்கப்பட்டுள்ள தண்ணீரைக் கொண்டு விவசாயிகள் நெல் சாகுபடி செய்துள்ளனர், ஆனால் தற்போது வாய்க்காலை ஆகாயத்தாமரை செடிகள் ஆக்கிரமித்துள்ளதால் பாசனத்திற்கு சீராக தண்ணீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது, எனவே நீர்வள ஆதாரத்துறையினர் உடனடியாக வாய்க்காலை ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரை செடிகளை அகற்ற வேண்டும் என பாசன விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu