ஈரோட்டில் நவீன தனியார் சொகுசு ஓட்டலுக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்

ஈரோட்டில் நவீன தனியார் சொகுசு ஓட்டலுக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்
X

ஈரோட்டில் உள்ள நவீன தனியார் சொகுசு ஓட்டலில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்த போது எடுத்த படம்.

ஈரோட்டில் உள்ள நவீன தனியார் சொகுசு ஓட்டலுக்கு நேற்று (நவ.12) இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோட்டில் உள்ள நவீன தனியார் சொகுசு ஓட்டலுக்கு நேற்று (நவ.12) இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு சத்தி சாலையில் காய்கறி மார்க்கெட்டுக்கு செல்லும் வீரபத்ரா வீதியில் உள்ள மூன்று மாடி அடுக்கு கொண்ட (ரத்னா ரெசிடென்சி) தனியார் சொகுசு விடுதி செயல்பட்டு வருகிறது. இதில் தங்கும் விடுதி, மீட்டிங் அறை என உள்ளது.

இந்நிலையில், நேற்றிரவு மர்ம நபர்கள் விடுதிக்கு ஈமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தனர். இதில் இரவு 10 மணிக்கு சரியாக வெடிகுண்டு வெடிக்கும் என இ-மெயில் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து சம்பவம் அறிந்த வடக்கு காவல் நிலைய போலீசார் சொகுசு விடுதிக்கு சென்று விசாரணையில் ஈடுபட்டனர் அதனைத் தொடர்ந்து ஹோட்டலில் உள்ள அறை மற்றும் மீட்டிங் ஹால் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெடிகுண்டு தடுப்பு போலீஸார் சோதனை செய்தனர்.

தொடர்ந்து விடுதியில் தங்கி இருந்தவர்களை வெளியேற்றி அறைகளில் மோப்ப நாய் உதவியுடன் விடுதி முழுவதும் சோதனை ஈடுபட்டனர். அதேபோல், நேற்று காலையில் தனியார் பள்ளியில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நிலையில் பள்ளி முழுவதும் சோதனை செய்த பிறகு அதுவும் புரளியாக இருந்தது தெரிய வந்தது.

இந்த நிலையில் தனியார் தங்கும் விடுதலை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. போலீசார் இ-மெயிலை ஆய்வு செய்தபோது. அது மலேசியாவில் இருந்து அனுப்பப்பட்டு இருப்பதாக கண்டறியப்பட்டது.

மேலும், கடந்த ஓரிரு நாட்களில் சந்தேகப்படும் வகையில் நபர் கள் யாராவது ஓட்டலுக்கு வந்தனரா? என்று கண்காணிப்பு கேமரா பதிவுகள் மூலம் போலீசார் சோதனை செய்து வருகிறார்கள். முழுமையான விசாரணைக்கு பின்னரே இந்த இ-மெயில் எதற்காக அனுப்பப்பட்டது என்று தெரியும் என போலீசார் தெரிவித்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!