ஆசனூர் அருகே சாலையில் மரத்தை வேரோடு சாய்த்த யானைகள்: போக்குவரத்து பாதிப்பு

ஆசனூர் அருகே சாலையில் மரத்தை வேரோடு சாய்த்த யானைகள்: போக்குவரத்து பாதிப்பு
X

சாலையோரம் இருந்த மரத்தை வேரோடு சாலையில் சாய்த்து தள்ளிய யானைகள்.

ஈரோடு மாவட்டம், ஆசனூர் அருகே சாலையோரத்தில் இருந்த மரத்தை காட்டு யானைகள் வேரோடு சாய்ந்து தள்ளியதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

ஆசனூர் அருகே சாலையோரத்தில் இருந்த மரத்தை காட்டு யானைகள் வேரோடு சாய்த்து தள்ளியதால், போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட ஆசனூர் வனச்சரகத்தில் யானை, புலி, சிறுத்தை உள்பட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இதில் யானை போன்ற விலங்குகள் அடிக்கடி உணவு, தண்ணீர் தேடி சாலையை கடந்து வருகின்றன.

மேலும், அவ்வப்போது யானைகள் சாலையில் உலா வருவது தொடர்கதையாகி விட்டது. மேலும், வனப்பகுதியை விட்டு வெளியேறும் காட்டு யானைகள் இந்த வனப்பகுதி வழியாக அமைந்துள்ள தமிழக - கர்நாடக மாநிலத்தை இணைக்கும் சத்தியமங்கலம் மைசூர் தேசிய - நெடுஞ்சாலையில் வாகனங்களை வழிமறித்து நிற்பதும் தற்போது வாடிக்கையாகி வருகிறது.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை (நேற்று) அதிகாலை ஆசனூர் அருகே சாலையோர வனப்பகுதியில் ஒரு காட்டு யானை தனது குட்டியுடன் நடமாடி கொண்டிருந்தது. அப்போது காட்டு யானை தனது குட்டியுடன் சேர்ந்து சாலையோரத்தில் இருந்த ஒரு மரத்தை முட்டி கீழே தள்ளியதால் மரம் வேருடன் சாலையில் சாய்ந்தது. இதன் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்து வந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மரத்தை வெட்டி அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர். மேலும், இரவு நேரத்தில் சாலையில் நடமாடும் காட்டு யானைகளின் அருகே செல்லக்கூடாது என வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!