ஈரோடு: கணினி மூலம் சுழற்சி முறையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு..!
ஈரோடு தொகுதியில் அனைத்து வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவிற்கு பயன்படுத்தப்படவுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை 2ம் கட்டமாக கணினி மூலம் சுழற்சி முறையில் ஒதுக்கீடு ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கணினி மூலம் 2ம் கட்டமாக சுழற்சி முறையில் செவ்வாய்க்கிழமை (இன்று) ஒதுக்கீடு செய்யப்பட்டது.
நாடாளுமன்ற தேர்தல் 2024ஐ முன்னிட்டு, ஈரோடு நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அனைத்து வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவிற்கு பயன்படுத்தப்படவுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை (இவிஎம், விவிபெட்) 2ம் கட்டமாக இந்திய தேர்தல் ஆணைய இணையதளத்தின் மூலம் கணினி சுழற்சி முறையில் ஒதுக்கீடு ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. ஈரோடு மாவட்ட தேர்தல் பொது பார்வையாளர் ராஜீவ் ரஞ்சன் மீனா மேற்பார்வையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள், வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான ராஜ கோபால் சுன்கரா இந்த ஒதுக்கீட்டை செய்தார்.
இந்திய தேர்தல் ஆணையத்தால், நாடாளுமன்றப் பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டு தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ம் தேதியன்று நடைபெறவுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை, பவானி, அந்தியூர், கோபிசெட்டிபாளையம், பவானிசாகர் உள்ளிட்ட 8 தொகுதிகளில் வாக்குப்பதிவிற்காக அமைக்கப்பட்டுள்ள 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அல்லாமல் 20 சதவீதம் கூடுதலாக (ரிசர்வ்) சேர்த்து 2,530 வாக்குச்சாவடிகள் உள்ளது.
இந்த வாக்குச்சாவடிகளில் பயன்படுத்துவதற்கான கட்டுப்பாட்டு இயந்திரம், வாக்குப்பதிவு இயந்திரம், வாக்காளர் தங்கள் அளித்த வாக்கினை சரிபார்க்கும் இயந்திரம் இந்திய தேர்தல் ஆணையத்தின் இணையதளமான இஎம்எஸ் போர்டல் மூலம் கணினி சுழற்சி முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டு செய்யப்பட்டு கடந்த 20ம் தேதி சம்பந்தப்பட்ட சட்டமன்ற தொகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, ஈரோடு நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட குமாரபாளையம் சட்டமன்றத் தொகுதியில் உள்ள 279 வாக்குச்சாவடி மையங்களுக்கு 668 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 334 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 362 வாக்காளர் தங்கள் அளித்த வாக்கினை சரிபார்க்கும் இயந்திரங்களும் இணையதளத்தின் மூலம் கணினி சுழற்சி முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதேபோல், ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் உள்ள 237 வாக்குச்சாவடி மையங்களுக்கு 568 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 284 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 308 வாக்காளர் தங்கள் அளித்த வாக்கினை சரிபார்க்கும் இயந்திரங்களும், ஈரோடு மேற்கு சட்டமன்றத் தொகுதியில் உள்ள 302 வாக்குச்சாவடி மையங்களுக்கு 724 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 362 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 392 வாக்காளர் தங்கள் அளித்த வாக்கினை சரிபார்க்கும் இயந்திரங்களும் இணையதளத்தின் மூலம் கணினி சுழற்சி முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதேபோல், மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியில் உள்ள 277 வாக்குச்சாவடி மையங்களுக்கு 664 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 332 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 360 வாக்காளர் தங்கள் அளித்த வாக்கினை சரிபார்க்கும் இயந்திரங்களும், தாராபுரம் சட்டமன்றத் தொகுதியில் உள்ள 298 வாக்குச்சாவடி மௌயங்களுக்கு 720 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 360 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 390 வாக்காளர் தங்கள் அளித்த வாக்கினை சரிபார்க்கும் இயந்திரங்களும் இணையதளத்தின் மூலம் கணினி சுழற்சி முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
காங்கயம் சட்டமன்றத் தொகுதியில் உள்ள 295 வாக்குச்சாவடி மையங்களுக்கு 712 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 356 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 386 வாக்காளர் தங்கள் அளித்த வாக்கினை சரிபார்க்கும் இயந்திரங்களும் என ஈரோடு நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 1688 வாக்குச்சாவடி மையங்களுக்கு 4056 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 2028 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 2198 வாக்காளர் தங்கள் அளித்த வாக்கினை சரிபார்க்கும் இயந்திரங்களும், இந்திய தேர்தல் ஆணைய இணையதளத்தின் மூலம் கணினி சுழற்சி முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதில் 680 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 340 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 510 வாக்காளர் தங்கள் அளித்த வாக்கினை சரிபார்க்கும் இயந்திரங்களும் இருப்பில் உள்ளது. இந்நிகழ்வின் போது, உதவி ஆட்சியர் (பயிற்சி) வினய் குமார் மீனா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) ரகுநாதன், வட்டாட்சியர் (தேர்தல்) சிவசங்கர், கணினி நிரலாளர் வெங்கடேஷ் உட்பட அனைத்து தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் தொடர்புடைய துறை அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu