மின்கட்டணம் - மாதையன்கோவில் பகுதி மின்நுகர்வோர் கவனத்திற்கு...

மின்கட்டணம் - மாதையன்கோவில் பகுதி மின்நுகர்வோர் கவனத்திற்கு...
X
மாதையன் கோவில் பகுதி மின் நுகர்வோர்கள், அக்டோபர் மாத மின் கட்டணத்தையே செலுத்தலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கோபி மின் பகிர்மான வட்டம், கோபி கோட்டம் டி.என். பாளையம் பிரிவு அலுவலகத்தில் உள்ள மாதையன் கோவில் பகிர்மானத்துக்கு உள்பட்ட மின் இணைப்புகளுக்கு, நிர்வாக காரணங்களால் டிசம்பர் மாத கணக்கீடு நேரடியாக செய்ய முடியவில்லை.

இதனால் அக்டோபர் மாத கட்டணத்தையே, டிசம்பர் மாத கட்டணமாக குறிப்பிட்ட காலத்துக்குள், மின் நுகர்வோர்கள் செலுத்தி மின் இணைப்பு துண்டிப்பை தவிர்க்கலாம். மேலும் விவரம் வேண்டுவோர் டி.என்.பாளையம் பிரிவு அலுவலகத்தை நேரில் அணுகலாம்.இந்த தகவலை கோபி மின்வாரிய செயற்பொறியாளர் சங்கர்`தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது