/* */

ஈரோடு மாவட்டத்தில் தட்கல் முறையில் மின் இணைப்பு: மின்வாரியம் அறிவிப்பு

தட்கல் முறையில் மின் இணைப்பு பெற விவசாயிகள் தொடர்பு கொள்ளலாம் என ஈரோடு மாவட்ட மின்வாரியம் அறிவித்துள்ளது.

HIGHLIGHTS

ஈரோடு மாவட்டத்தில் தட்கல் முறையில் மின் இணைப்பு: மின்வாரியம் அறிவிப்பு
X

விவசாயிகள் மின் இணைப்பு பெறலாம் (பைல் படம்).

தட்கல் முறையில் மின் இணைப்பு பெற விவசாயிகள் தொடர்பு கொள்ளலாம் என ஈரோடு மாவட்ட மின் வாரியம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, விவசாய மின் இணைப்பு பெற காத்திருப்பு பட்டியலில் உள்ள விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள், விரைந்து விவசாய மின் இணைப்பு பெறும் வகையில், விரைவு (தட்கல்) மின் இணைப்பு வழங்கல் திட்டம் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தால் நடைமுறை படுத்தப்பட்டு விவசாயிகளுக்கு மின் இணைப்புகள் வழங்கப்படுகிறது.

மேலும் தட்கல் முறையில் ஏற்கனவே பதிவு செய்துள்ள விவசாயிகளுக்கும், தற்போது தட்கல் முறையில் பதிவு செய்யும் விவசாயிகளுக்கும் முன்னுரிமை அடிப்படையில் விவசாய மின் இணைப்புகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத் தில் ஏற்கனவே விவசாய மின் இணைப்பு கேட்டு பதிவு செய்துள்ள, மின் இணைப்பு பெற விருப்பமுள்ள ஈரோடு மாவட்ட விவசாயிகள், இந்த தட்கல் சிறப்பு திட்டத்தின் கீழ் விவசாய மின் இணைப்பு பெற தங்கள் பகுதியில் உள்ள மின் வாரிய செயற்பொறியாளரை தொடர்பு கொள்ளலாம்.

Updated On: 29 Aug 2023 12:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அன்பு மனைவிக்கு அமுதமொழிகள்! திருமண நாள் வாழ்த்துகள்
  2. தேனி
    வணிகமயமான வீரபாண்டி திருவிழா! நெருக்கடியில் தவிக்கும் பக்தர்கள்
  3. தேனி
    தேனியில் 6வது நாளாக மழை! வீரபாண்டியில் வானில் வர்ணஜாலம்
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  8. ஈரோடு
    கடம்பூர் வனத்தில் உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்ற பெண் யானை...
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் கொட்டிய கோடை மழை: ஒரே நாளில் 94.3 மி.மீ பதிவு
  10. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்