கொளுத்தும் வெயில்: ஈரோடு தொகுதியில் 1 மணி வரை 42.23 சதவீத வாக்குப்பதிவு..!

கொளுத்தும் வெயில்: ஈரோடு தொகுதியில் 1 மணி வரை 42.23 சதவீத வாக்குப்பதிவு..!
X

ஈரோடு நாடாளுமன்றத் தேர்தல் - 2024.

ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் மதியம் 1 மணி நிலவரப்படி 42.23 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் மதியம் 2 மணி நிலவரப்படி 42.23 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி மிக அமைதியான முறையில் நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவு தொடங்கியது முதலே பொதுமக்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்வதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

இந்நிலையில், ஈரோடு தொகுதி முழுவதும் இதுவரை பதிவாகியுள்ள வாக்குப்பதிவு சதவீதத்தை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 9 மணி நிலவரப்படி 13.37 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து, 11 மணி நிலவரப்படி 25.37 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

அதனைத் தொடர்ந்து, வாக்குப்பதிவு தொடங்கி 6 மணி நேரத்தில் அதாவது இன்று மதியம் 1 நிலவரப்படி ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் 42.23 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.

மேலும், இன்று காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடையவிருக்கிறது. கடைசி நிமிஷங்களில் வருவோருக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டு அவர்களுக்கு வாக்களிக்க வாய்ப்பு அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
ராசிபுரம் அருகே இரு சமூகத்தினர் மோதல்- போலீசார் குவிப்பு..!