/* */

நாளை மாலை 5 மணியுடன் ஈரோடு இடைத்தேர்தல் பிரசாரம் நிறைவு

ஈரோடு கிழக்குத் தொகுதியில் நாளை மாலை 5 மணியுடன் பிரசாரத்தை முடித்து கொள்ள வேண்டும் என தேர்தல் அலுவலர் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

நாளை மாலை 5 மணியுடன் ஈரோடு இடைத்தேர்தல் பிரசாரம் நிறைவு
X

ஈரோடு கிழக்குத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சிவகுமார்.

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக சார்பில் கே.எஸ். தென்னரசு, தேமுதிக சார்பில் ஆனந்த் நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன் மற்றும் சுயேட்சைகள் உள்பட 77 பேர் போட்டியிடுகின்றனர். வரும் பிப்ரவரி 27ல் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், நாளை மாலை 5 மணியுடன் பிரசாரம் நிறைவு பெறுகிறது.

இதையொட்டி, அங்கு வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இடைத்தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், நாளை மாலை 5 மணியுடன் ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலுக்கான பிரசாரம் ஓய்கிறது.

அனுமதி அளிக்கப்பட்ட 107 தேர்தல் பணிமனைகளை நாளை மாலைக்குள் கட்சிகள் அப்புறப்படுத்த வேண்டும். வெளி மாவட்டங்களை சேர்ந்த கட்சி பிரமுகர்கள், பொதுமக்கள் நாளை மாலை 5 மணியுடன் தொகுதியை விட்டு உடனடியாக வெளியேற வேண்டும் என தெரிவித்தார். வாக்காளர்கள் சுதந்திரமாக வாக்களிக்க அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வாக்குப்பதிவு மட்டுமின்றி வாக்கு எண்ணிக்கைக்கான பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன. பரிசுப்பொருட்கள் அளித்ததாக 2 வழக்குகள் பதிந்துள்ளோம். பரிசுப்பொருட்கள் குறித்த புகார்கள் தொடர்பாக விசாரிக்கிறோம். அதிகாரபூர்வ குற்றச்சாட்டுகளை விசாரித்து வருகிறோம், எனவும் தேர்தல் அலுவலர் தெரிவித்தார்.

Updated On: 24 Feb 2023 8:15 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்
  2. பூந்தமல்லி
    திருவேற்காட்டில் குடியிருப்புகளை அகற்ற எதிர்ப்பு: கண்ணில் கருப்பு துணி...
  3. நாமக்கல்
    கொல்லிமலை அருவிகளில் குளிக்கத் தடை: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
  4. நாமக்கல்
    நாமக்கல், திருச்செங்கோடு நகைக்கடையில் பணத்தை ஏமாந்தவர்கள் புகாரளிக்க...
  5. கல்வி
    அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்
  6. கீழ்பெண்ணாத்தூர்‎
    வேட்டவலம் அருகே கள்ளச்சாராய ஊறல் கொட்டி அழிப்பு: ஒருவர் கைது
  7. கலசப்பாக்கம்
    பருவதமலையில் புதிய இரண்டு இடி தாங்கிகள் பொருந்தும் பணி துவக்கம்
  8. வீடியோ
    தனிச்செயலாளர் மீது வழக்குப் பதிவு | Kejriwal-க்கு புதிய நெருக்கடி |...
  9. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  10. திருவண்ணாமலை
    அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு...